சுற்றுலா அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும் 16 பேர் கொண்ட ஆஸி. வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியானது அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் பேட் கம்மின்ஸிற்கு அவரது குழந்தையின் பிறப்பு காரணமாக ஓய்வு வழங்கியிருக்கின்றது.
>>ஒருநாள் தொடரினையும் பறிகொடுத்த இலங்கை வீரர்கள்<<
மறுமுனையில் ஆஸி. அணியானது 21 வயது நிரம்பிய கூப்பர் கொன்னொலியினை முதல் தடவையாக இலங்கை தொடரில் இணைத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய 19 வயதின் முன்னாள் தலைவரான கூப்பர் கொன்னொலி, அவுஸ்திரேலியாவின் உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து பிரகாசித்து வந்த நிலையிலையே இலங்கை சுற்றுப்பயணத்திற்காக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் இளம் வீரரான நேதன் மெக்சீவனி, இளம் சுழல்பந்துவீச்சாளர்களான டொட் மேர்பி, மேட் குஹ்னமேன் ஆகியோருக்கும் அவுஸ்திரேலிய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜோஷ் ஹேசல்வூட், மிச்சல் மார்ஷ் ஆகியோருக்கு உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியானது ஏற்கனவே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிலையில் பரீட்சார்த்த ரீதியாக இலங்கை தொடரில் கிளன் மெக்ஸ்வெல், அடம் ஷம்பா மற்றும் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இம்மாதம் 29ஆம் திகதி காலியில் ஆரம்பமாகுகின்றது.
அவுஸ்திரேலிய குழாம்
ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), ஷோன் எப்போட், ஸ்கொட் போலன்ட், அலெக்ஸ் கெரி, கூப்பர் கொன்னொலி, ட்ராவிஸ் ஹெட் (பிரதி தலைவர்), ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, சேம்கொன்டஸ்டாஸ், மேட் குஹ்னமேன், மார்னஸ் லபச்சேனே, நதன் லயன், நேதன் மெக்சீவனி, டொட் மேர்பி, மிச்சல் ஸ்டார்க்,போ வெப்ஸ்ட்டர்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<