களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு தொடர்: முதல் சுற்று முடிவுகள்

886
Kalutara Muslim Central College

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதத்தில், ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான அழைப்பு கால்பந்து தொடர் இன்று (29) கோலாகலமாக ஆரம்பமாகியது.

கால்பந்து விளையாட்டு பிரபல்யமாக காணப்படும் மேல், தென் மாகாணங்களின் எட்டு பிரபல பாடசாலைகள் இத்தொடரில் பங்குபெறுகின்றன. தொடரின் போட்டிகள் யாவும் இன்றும் (29), நாளையும் (30) வெட்டும்கட  பாகிஸ்தான் மைதானத்தில் நடைபெறுகின்றன.

பசாலின் அபார கோலினால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷ் கால்பந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற நட்புரீதியிலான கால்பந்து….

தொடரில் பங்குபெறும் பாடசாலை அணிகள் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடாத்துகின்றன. குழு A இல் தொடரை நடாத்தும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, அளுத்கமை ஸாஹிரா கல்லூரி மற்றும் பேருவளை அல்ஹூமைஷரா தேசிய பாடசாலை அணிகள் மோதும் இதேவேளை, குழு B இல் ஹமீட் அல்ஹூசைனி கல்லூரி, களுத்துறை திருச்சிலுவை கல்லூரி, பேருவளை Z.A.M. றிபாய் ஹாஜியர் முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரி என்பன பெயரிடப்பட்டிருந்தன.

தொடரின் இன்றைய முதல் நாளில் குழுநிலைப் போட்டியான நொக்அவுட் போட்டிகள் இடம்பெற்றன.

குழு A

குழு A அணிகளுக்கிடையிலான முதல் நொக்அவுட் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியும், பாணந்துறை மத்திய கல்லூரியும் மோதின. போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 4-0 என்கிற கோல்கள் கணக்கில் ஆட்டத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.

தொடர்ந்து, குழு A யின் இரண்டாவது நொக்அவுட் ஆட்டத்தில் அளுத்கமை ஸாஹிரா கல்லூரியும் பேருவளை அல்ஹுமைஷரா கல்லூரியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 4-4 என்கிற கோல்கள் கணக்கில் சமநிலை அடைந்தது.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம்  உருவாக, பெனால்டியில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் அளுத்கமை ஸாஹிரா கல்லூரி வெற்றி பெற்றது.

ThePapare.com: பிரீமியர் லீக் மூன்றாவது வாரத்தின் சிறந்த வீரர்

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் மூன்றாவது வாரத்தின் போட்டிகள்….

குழு B

குழு B இன் முதல் நொக்அவுட் ஆட்டத்தில் கொழும்பு ஹமீட் அல்ஹூசைனி கல்லூரிக்கும், களுத்துறை திருச்சிலுவை கல்லூரிக்கும் இடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் திருச்சிலுவை கல்லூரி அணியினர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. இதனால், குழு B இன் முதல் நொக்அவுட் ஆட்ட வெற்றியாளர்களாக வோர்க் ஓவர் முறையில் ஹமீட் அல்ஹுசைனி கல்லூரி தேர்வு செய்யப்பட்டது.

மறுமுனையில், குழு B இன் இரண்டாவது நொக்அவுட் ஆட்டத்தில் கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியும், பேருவளை Z.A.M றிபாய் ஹாஜியர் முஸ்லிம் மஹா வித்தியாலயமும் விளையாடிய நிலையில், திறமையினை வெளிப்படுத்திய கிந்தோட்டை ஸாஹிரா வீரர்கள் 2-1 என்கிற கோல்கள் கணக்கில் Z.A.M. றிபாய் ஹாஜியர் கல்லூரியினை தோற்கடித்தனர்.

இரண்டு குழுக்களுக்கும் இடையிலான நொக்அவுட் போட்டிகளின் அடிப்படையில் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, குழு A சார்பாக களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியும், அளுத்கமை ஸாஹிரா கல்லூரியும் தெரிவாகியுள்ளதோடு, குழு B சார்பாக ஹமீட் அல்ஹூசைனி கல்லூரி அணியும், கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியும் தெரிவாகியுள்ளன.

தொடரின் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நாளை (30) நடைபெறும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<