ThePapare.com: பிரீமியர் லீக் மூன்றாவது வாரத்தின் சிறந்த வீரர்

114

இங்கிலாந்து பிரீமியர் லீக் (EPL) தொடரின் மூன்றாவது வாரத்தின் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ThePapare.com ரசிகர்களான உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்காக வாக்களிக்க முடியும்.

வாரத்தின் சிறந்த வீரருக்கு ரசிகர்களுக்கு கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவு திகதி ஓகஸ்ட் 31)

[socialpoll id=”2517426″]

ருயி பட்ரிசியோ (வோல்வ்ஸ்)

வொல்வர்ஹம்டன் வொன்டரர்ஸ் கழகம் ருயி பட்ரிசியோவின் அபார கோல்காப்பு மூலம் மன்செஸ்டர் சிட்டி அணியுடனான போட்டியை 1-1 என சமன்செய்தது. இந்த போட்டியில் அவர் ரஹீம் ஸ்டர்லிங் உதைத்த பந்தை தனது இடது கையால் தடுத்தது உட்பட தீர்க்கமான மூன்று கோல் வாய்ப்புகளை தடுத்தார். அவர் மாத்திரம் வொல்ஸ் கழகத்திற்கு காவலராக இருக்காவிட்டால் அந்த அணி பெரும் தோல்வி ஒன்றை சந்தித்திருக்கும்.

சலாஹ்வின் கோல் மூலம் விலர்பூல் அடுத்தடுத்து 3ஆவது வெற்றி: ஆர்சனலுக்கு முதல் வெற்றி

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது…

ஜேம்ஸ் மில்னர் (லிவர்பூல்)

பிரைட்டனுக்கு எதிராக ஒரே ஒரு கோலை பெற்று லிவர்பூல் 1-0 என்று வெற்றி பெற மில்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் தாக்குதல் ஆட்டங்கள் மூலம் பிரைட்டனுக்கு நெருக்கடி கொடுத்தார்.

 

ஹரி மகுய்ரே (லெஸ்டர் சிட்டி)

சௌதம்டனுடனான போட்டியில் ஆரம்பத்தில் பின்தங்கிய நிலையிலேயே லெஸ்டர் அந்த கழகத்தை வீழ்த்தியது. 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்ட சௌதம்டன் அணிக்கு எதிராக சிறப்பாக செயற்பட்ட மகுய்ரே மேலதிக நேரத்தில் கோல் பெற்று லெஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற உவினார்.

ஈடன் ஹசார்ட் (செல்சி)

நியூகாஸிலுக்கு எதிரான போட்டியில் செல்சி மூன்று புள்ளிகளை பெற்றுக்கொண்டது. பெனால்டி ஒன்றை ஹசார்ட் கோலாக்கியது மற்றும் யெட்லினின் ஓன் கோல் லண்டனைச் சேர்ந்த கழகத்தின் வெற்றிக்கு உதவியது. இந்த போட்டியில் நியூகாஸிலின் ஜோசலுவின் கோல் சிறப்பாக இருந்தது. செல்சியின் தாக்குதல் ஆட்டத்தில் ஹசார்ட் முக்கிய பங்காற்றினார் என்பதோடு பல தடவைகள் பந்தை பறித்த அவர் கோலை நோக்கி ஐந்து உதைகளையும் ஒரு பெனால்டியையும் பெற்றார்.

அலெக்சான்டர் மிட்ரோவிக் (புல்ஹாம்)

மிட்ரோவிக்கின் உதவியோடு பார்ன்லியை வீழ்த்தி இந்த பருவத்தில் புல்ஹாம் முதல் வெற்றியை பெற்றது. செர்பியரான மிட்ரோவிக் ஹட்ரிக் கோலைப் பெற வாய்ப்பு இருந்தபோதும் பார்ன்லியின் பின்கள வீரர்கள் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். இது புல்ஹாம் அணிக்கு அவர் எவ்வளவு முக்கிமானவர் என்பதையும் காட்டுவதாக இருந்தது.

லூகாஸ் மௌரோ (டொட்டன்ஹாம்)

மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் 3-0 என போட்டியை வென்றது. லூகாஸ் மௌரோ, டொட்டன்ஹாமின் இரண்டு மற்றும் மூன்றாவது கோல்களை புகுத்தினார். அவர் பந்தை கடத்திய வேகம் யுனைடெட் பின்கள வீரர்களால் சமாளிக்க முடியாததாக இருந்தது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்தின் முன்னாள் வீரரான அவர் போட்டி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தார்.

ThePapare.com இன் பிரீமியர் லீக் வாரத்தின் சிறந்த வீரர் – ருயி பட்ரிசியோ

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<