இரத்துச் செய்யப்பட்ட இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணம்

97

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டில் நடைபெறவிருந்த இளையோர் வலைபந்து உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பன இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச வலைப்பந்து சம்மேளனம் (INF) தெரிவித்திருக்கின்றது. 

கடற்கரை விளையாட்டுக்கான கேந்திர நிலையமாக திருகோணமலை

முன்னதாக இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் பிஜி தீவுகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கொரியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.  

இவ்வாறு திட்டமிடப்பட்ட இரண்டு தொடர்களும் அதிகரித்து வருகின்ற கொவிட்-19 வைரஸினுடைய அச்சுறுத்தல் காரணமாக தற்போது இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. 

இதேவேளை, இந்த தொடர்களை இரத்துச் செய்யும் முடிவினை சர்வதேச வலைப்பந்து சம்மேளனம் தமது அண்மைய ஆண்டு கூட்டத்தின் போது மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…