இலங்கையுடனான T-2௦ தொடருக்கு அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர்!

367
Australia Cricket

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது சொந்த மண்ணில் இலங்கை அணியுடன் மூன்று சர்வதேச T2 போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. குறித்த அவுஸ்திரேலிய T2௦ அணிக்கு  அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜெஸ்டின் லங்கர் பயிற்சி அளிக்கவுள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டெரன் லிமன், அவுஸ்திரேலிய அணி அடுத்து எதிர்கொள்ளவுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்தியாவுடனான தொடருக்கான அணியை தயார்படுத்த உள்ளார். இதன் காரணமாகவே, 46 வயதான லங்கர் அவுஸ்திரேலிய T2 அணிக்கு பயிற்றுவிக்கவுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் கரீபியனில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி சிறந்த முறையில் செயற்பட்டு தொடரை வெற்றி கொண்டது. அதன்போது, அவுஸ்திரேலிய அணிக்கு ஜஸ்டின் லங்கரே தலைமை பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியுடனான மூன்று T2 போட்டிகள் கொண்ட குறித்த தொடரின் முதலாவது T2 போட்டி பெப்ரவரி 17ஆம் திகதி மெல்பேனில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி பெப்ரவரி 19ஆம் திகதி கர்டினியா பார்க் மைதானத்திலும், மூன்றாவதும் இறுதியுமான போட்டி பெப்ரவரி 22ஆம் திகதி அடேலெய்த் ஓவல் மைதானத்திலும் இடம்பெறும்.

அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளிப்பது குறித்து ஜெஸ்டின் லங்கர் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச T2௦ கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே அவுஸ்திரேலிய அணி இன்னும் சம்பியன்ஷிப் பட்டத்தினை கைப்பற்றவில்லை. அதனால், கிடைக்கும் ஒவ்வொரு போட்டி வாய்ப்புக்களையும் பயன்படுத்தி எங்களுடைய திறமைகளை அதிகளவில் விருத்தி செய்து கொள்ள வேண்டும். எனவே, இலங்கையுடனான இந்த மூன்று போட்டிகளும் எமக்கு மிகவும் முக்கியமானவை” என்று தெரிவித்தார்.     

செய்தி மூலம்: BBC