இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்

288

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருக்கும் இருதரப்பு தொடரில் இலங்கை அணியின் புதிய முகாமையாளராக ஜேரோமி ஜெயரட்ன நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல்

தற்காலிக ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்டு வந்த அசன்த டி மெல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை அடுத்து சொந்தக் காரணங்கள் கருதி முகாமையாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். 

அசன்த டி மெல்லின் இடத்தினை நிரப்பும் நோக்கிலேயே தற்போது புதிய முகாமையாளராக ஜெரோமி ஜெயரட்ன நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையில் முக்கிய பதவி வகித்து வந்திருந்த ஜெரோமி ஜெயரட்ன, புதிய முகாமையாளராக நியமனம் செய்யப்பட்ட போதும் அவரின் பதவிக்காலம் தற்காலிகமானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த ஜெரோமி ஜெயரட்ன, இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது தற்காலிக பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<