தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் ஒத்திவைப்பு

33
 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (09) ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் அதனைத்தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊடரங்கு காரணமாக தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3.00 மணிவரை போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏனைய போட்டி நிகழ்ச்சிகள் காலவரையறையின்றி பிற்போடப்படுவதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மேலும் தெரிவித்தது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குப் பிறகு மீண்டும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்டு வந்த 20 வயதின்கீழ் கூடைப்பந்தாட்டப் போட்டிகளும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<