இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்

76
Getty Image
 

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடன் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் அரைச்சதம் கடந்து 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் அந்த அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

எனினும், குறித்த போட்டியின் போது அவரது வலதுகணுக் காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது.

T20 தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இந்த நிலையில், அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட  MRI பரிசோதனையல் காயத்தின் தன்மை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுஇதன்காரணமாக அவரை இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அவர் மீண்டும் வீடு திரும்பி காயத்துக்கான மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக டாவிட் மலான் இங்கிலாந்து ஒருநாள் அணியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<