ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம்

ICC Men's Player of the Month July 2023

93

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  

ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், சதாப் கான் ஆகியோருடன் மேற்கிந்திய தீவுகளின் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். 

ஒரு மாற்றத்துடன் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

குறித்த இந்த போட்டியில் பாபர் அசாம் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவுசெய்யப்படுள்ளார். பாபர் அசாம் மூன்றாவது தடவையாக மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டுள்ளமை இங்கு விஷேட அம்சமாகும்.  

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டிகளில் இவர் பிரகாசிக்க தவறியிருந்தார். எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இமாம் உல்-ஹக்குடன் இணைந்து 118 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்ததுடன், 53 ஓட்டங்களையும் விளாசினார். தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 60 ஓட்டங்களை இவர் விளாசியதுடன், பாகிஸ்தான் அணி தொடரையும் 3-0 என வெற்றிக்கொண்டது. 

இலங்கையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் தொடரையடுத்து, பாகிஸ்தான் அணி ஆசியக் கிண்ணத்தொடரில் நேபாள அணியை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் 151 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த சதத்துடன் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 19 சதங்களை அடித்தவர் என்ற மைல்கல்லையும் பாபர் அசாம் எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<