ஜெர்மனி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி

227
Germany 2-0 Ukraine: Euro 2016
Getty Images
 

ஐரோப்பியக் கிண்ண கால்பந்து  போட்டியில் நேற்று ஜெர்மனி-உக்ரைன் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

15ஆவது  ஐரோப்பிய  கிண்ண கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.‘சி’  பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜெர்மனிஉக்ரைன் அணிகள் மோதின.

கோபா அமெரிக்கா கிண்ணத்தில் இருந்து வெளியேறியது பிரேசில்

ஜெர்மனியின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு உக்ரைன் வீரர்களால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 19ஆவது நிமிடத்தில் முஸ்டாபியும், 92ஆவது நிமிடத்தில் பாஸ்டின் சுவெஸ்டின்கரும் கோல் அடித்தனர். உக்ரைன் அணியால் பதில் கோல் போட முடியாதது பரிதாபமே.

நடப்பு உலக சம்பியனான ஜெர்மனி அணி 2–வது ஆட்டத்தில் போலந்தை 16ஆம் திகதி சந்திக்கிறது. அதே தினத்தில் உக்ரைன் அணி வடக்கு அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. மிலிக் 51ஆவது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்