நியூ ஸ்டாரை வீழ்த்திய பொலிஸ் DCL இல்

286

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கொழும்பு, சுததாச அரங்கில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் டிவிஷன்-1 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. இதன் மூலம் பொலிஸ் அணி 2019 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்றது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் முதல் இடத்தை பிடித்ததால் அதிக வெற்றி வாய்ப்புடனேயே பொலிஸ் அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது. மறுபுறம் நியூ ஸ்டார் அணி சுப்பர் சிக்ஸ் சுற்றில் நான்காவது இடத்தையே பிடித்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டயலொக் சம்பியஸ் லீக்கின் 2019 தொடருக்கு முன்னேறுவதை உறுதி செய்யும் நிலையிலேயே இரு அணிகளும் களமிறங்கின.

>> SLTB அணியை வீழ்த்தி சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றது செரண்டிப்

பொலிஸ் அணிக்காக சிறந்த ஆரம்பம் ஒன்றாக ரியாஸ் மொஹமட் தலையால் முட்டி கோலை நோக்கி செலுத்திய பந்து துரதிஷ்டவசமாக கம்பத்தில் பட்டு வெளியேறியது. இதன்போது நியூ ஸ்டார் வீரர் மொஹமட் நிபாஸ் காயமடைந்ததால் மொஹமட் பாஹிர் பதில் வீரராக அழைக்கப்பட்டார்.  

பொலிஸ் அணி பெனால்டி பகுதிக்கு அருகில் வைத்து நியூ ஸ்டார் தேவையற்ற ப்ரீ கிக் ஒன்றை விட்டுக்கொடுத்தபோது அது கோலாக மாறும் வாய்ப்பு நெருங்கியது.  

போட்டியில் பொலிஸ் அணி முழுமையாக ஆக்கிரமிப்பு செலுத்தியது. அந்த அணியின் முன்கள வீரர்களான ருஸைக் மொஹமட், ரியாஸ் அஹமட் மற்றும் ஷபீர் ரசூனியா எதிரணிக்கு சவாலாக இருந்தனர்.

இதனால் நியூ ஸ்டார் அணிக்கு சிறு வாய்ப்புகள் ஏற்பட்டபோதும் பந்து அதிக நேரம் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திடமே இருந்தது.

முதல் பாதி முடியும் தருவாயில் ரியாஸ் மொஹமட் நேர்த்தியாக பரிமாற்றிய பந்தை பெற்ற ஷபீர் ரசூனியா பொலிஸ் அணிக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். அவர் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தின் இடது மூலையால் வலைக்குள் புகுந்தது.    

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

ருசைக் மொஹமட் பந்தை சிறப்பாக கடத்திச் சென்று கோலாக மாற்றியபோதும் இரண்டாவது பாதி ஆட்டத்தை 2-0 என்ற முன்னிலையுடன் பொலிஸ் அணி ஆரம்பித்தது.   

நியூ ஸ்டார் கோல்காப்பாளர் மொஹமட் இம்டியாஸ் கோல் எல்லையில் இருந்து விலகி இருப்பதை கண்ட சத்துர குணரத்ன தனது சாகசத்தை வெளிக்காட்டி பந்தை மேலால் வலைக்குள் செலுத்தினார். இம்டியாஸின் விரல் நுனியில் பந்து பட்டபோதும் அது வலைக்குள் சென்றது.  

ஒரு மணி நேரத்தை எட்டும்போது ஷபீர் ரசூனியா கடத்திய பந்தை அபாரா கோலாக மாற்றினார். அப்போது எதிரணி கோல் காப்பாளர் வெறும் பார்வையாளராக மாறவேண்டி ஏற்பட்டது.

>> உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டும் சந்திமால்

பொலிஸ் அணிக்கு கடைசி நேரத்தில் மேலும் கோல்கள் பெற வாய்ப்புகள் கிட்டியபோது அவ்வாய்ப்புகள் சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த கோல் வாய்ப்புகளை தவற விடாமல் இருந்திருந்தால் ஷபீர் ரசூனியா மற்றும் ருசைக் மொஹமட் இருவருக்கும் ஹெட்ரிக் கோல் பெற வாய்ப்பு இருந்தது.  

குழு நிலை போட்டியில் இதே பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக நியூ ஸ்டார் அணி 1-1 என சமநிலை செய்தே சுபர் 6 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4 – 0 நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் சிறந்த வீரர் – ருசைக் மொஹமட் (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – ஷபீர் ரசூனியா 45+1′, ருசைக் மொஹமட் 48′ & 60′, சத்துர குணரத்ன 52’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<