Home Tamil T20 தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

T20 தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி

112
PA Images via Getty Images
PA Images via Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி டக்வெத் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதேநேரம், இப்போட்டியின் வெற்றியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினையும், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

>> இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது T20 போட்டி, வியாழக்கிழமை கார்டிப் நகரில் (25) ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார். 

இந்த T20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற காரணத்தினால் இப்போட்டிக்கான இலங்கை அணி கட்டாய வெற்றியொன்றினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, தனன்ஞய டி சில்வா, நுவான் பிரதீப் ஆகியோருக்குப் பதிலாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பினுர பெர்னாந்து ஆகிய வீரர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர். 

அதேநேரம், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது. 

>> ‘Hall Of Fame’ விருது குமார் சங்கக்காரவிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை அணி – தனுஷ்க குணத்திலக்க, அவிஷ்க பெர்னாந்து, குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான, அகில தனன்ஞய, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாந்து

இங்கிலாந்து – ஜேசன் ரோய், சாம் பில்லிங்ஸ், டாவிட் மலான், ஜொன்னி பெயர்ஸ்டோவ், இயன் மோர்கன் (தலைவர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், டேவிட் வில்லி, ஆதீல் ரஷீட், மார்க் வூட்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் 39 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணி சார்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் மார்க் வூட் மற்றும் ஆதில் ரஷீட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருக்க, சாம் கர்ரன் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர். 

பின்னர் போட்டியில் மழையின் குறுக்கீடு உருவாகிய காரணத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் இங்கிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 18 ஓவர்களில் 103 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைவதற்காக பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் காட்டிய போதும் சாம் பில்லிங்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டொன் ஆகியோரின் பொறுமையான ஆட்டம் காரணமாக குறித்த வெற்றி இலக்கினை 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களுடன் அடைந்தது. 

>> இலங்கையின் அடுத்த மெதிவ்ஸ் இவர் தான்: லசித் மாலிங்க

இங்கிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் லியாம் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளுக்கு 29 ஓட்டங்களை எடுக்க, சாம் பில்லிங்ஸ் 24 ஓட்டங்களை எடுத்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.

இலங்கை அணி T20 தொடரினை இழந்த நிலையில் இரண்டு அணிகளும் மோதும் இந்த T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (26) சௌத்தம்ப்டன் நகரில் நடைபெறுகின்றது. 

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்) 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<