ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராகும் ஜொனதன் ட்ரொட்

Afghanistan Cricket

159

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜொனதன் ட்ரொட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜொனதன் ட்ரொட் கடந்த 2018ம் ஆண்டு ஓய்வை அறிவித்திருந்த நிலையில், அதன் பின்னர் இங்கிலாந்து, இங்கிலாந்து லையன்ஸ் மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகளுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

>> ஜடேஜா விளையாடுவதில் சந்தேகம்! ; T20I தொடரை தவறவிடும் ராஹுல்!

அதுமாத்திரமின்றி இறுதியாக நடைபெற்றுமுடிந்த T20I உலகக்கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து பணியை ஆரம்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேம் கூச் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போதும், அவருக்கு ஏற்பட்ட கடுமையான சுகயீனம் காரணமாக அவர் பயிற்றுவிப்பு நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், ஜொனதன் ட்ரொட் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<