மீண்டும் கலைகட்டவுள்ள Deedat ஸாஹிரா சூப்பர் 16 – 2022

456

பாடசாலை கால்பந்தில் முன்னணி தொடர்களில் ஒன்றாக கருதப்படும் Deedat ஸாஹிரா சூப்பர் 16 எழுவர் கால்பந்து தொடர் 2022 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவத் தலைவர்கள் அமைப்பினால் (PPA) வருடாவருடம் நடத்தப்படுகின்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட இந்த போட்டித் தொடர் 16வது முறையாக இம்முறை இடம்பெறவுள்ளது. இவ்வருட போட்டிகள் ஒக்டோபர் முதலாம் திகதி முழுநாளும் கொழும்பு குதிரைப்பந்தய திடல் சர்வதேச அரங்கில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

>> Deedat ஸாஹிரா சூப்பர் 16 2022 – ஊடக சந்திப்பின் புகைப்படங்கள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இம்முறை தொடர் மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மோதலாக இடம்பெறும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தின் 16 முன்னணி பாடசாலைகளின் கால்பந்து அணிகள் இம்முறை தொடரில் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில், இந்த தொடருக்கான ஊடக சந்திப்பு வியாழக்கிழமை (22) ஸாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, தொடரின் அனுசரணையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், தொடரில் ஆடும் அணிகளை குழுநிலைப்படுத்தும் குலுக்கல் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடரின் முதல் சுற்றில் அணிகள் 4 குழுக்களான பிரிக்கப்பட்டு (ஒரு குழுவில் 4 அணிகள்) போட்டிகள் இடம்பெறும். லீக் முறையில் இடம்பெறும் குழுநிலை போட்டிகளின் நிறைவில், ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும்.

இந்த தொடருக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கும் Deedat நிறுவனம் இம்முறையும் தொடரின் பிரதான அனுசரணையாளராக இருப்பதுடன், தொடரின் டிஜிடல் ஊடக பங்காளராக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com கைகோர்த்துள்ளது. மேலும் தொடரின் காலிறுதி சுற்று முதல் அனைத்து போட்டிகளும் ThePapare.com ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

போட்டித் தொடருக்கான குழுவும் அணிகளும்

குழு A – புனித ஜோசப் கல்லூரி – கொழும்பு, அல் ஹிக்மா கல்லூரி – கொழும்பு, மாரிஸ் டெல்லா கல்லூரி – நீர்கொழும்பு, இந்து கல்லூரி – கொழும்பு

குழு B – புனித தோமையர் கல்லூரி – கல்கிஸ்ஸ, லைசியம் சர்வதேச பாடசாலை – நுகேகொட, புனித பெனடிக்ட் கல்லூரி – கொழும்பு, அலிதியா சர்வதேச பாடசாலை – கொழும்பு

குழு C – ஸாஹிரா கல்லூரி – கொழும்பு, தாருஸ்ஸலாம் கல்லூரி – கொழும்பு            , டி மெஸெனட் கல்லூரி – கந்தானை, டி எஸ் சேனானாயக்க கல்லூரி – கொழும்பு

குழு D – கேட்வே கல்லூரி – கொழும்பு, வெஸ்லி கல்லூரி – கொழும்பு, றோயல் கல்லூரி – கொழும்பு, இசிபத்தன கல்லூரி – கொழும்பு

தொடரின் ஏனைய அனுசரணையாளர்கள்

 • தங்க அனுசரணையாளர் – Trainocate
 • வெள்ளி அனுசரணையாளர் – CIMA Sri Lanka
 • உத்தியோகபூர்வ வங்கி மற்றும் நிதி பங்காளர் – Al Falah, Alternate Financial Services of LOLC Finance Plc
 • உத்தியோகபூர்வ உணவு வழங்குனர் – Royal Biryani
 • உத்தியோகபூர்வ புகைப்பட பங்காளர் – Ikram Studio
 • உத்தியோகபூர்வ நீர் வழங்குனர் – Aqua Fresh Natural Water

நிகழ்ச்சி பங்காளர்கள் 

 • A brand Wooden Flooring
 • Sports World
 • Smart Biz
 • EFL
 • FONO Technologies
 • BMS Manpower

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<