யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியினை வீழ்த்திய கொழும்பு இணை அணி

302
Jaffna Masters vs Combined Masters

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் மற்றும் கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற கண்காட்சி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், இணைப்பு மாஸ்டர்ஸ் அணி 62 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>மழையினால் தடைப்பட்ட யாழ்ப்பாண – தோமியன் மாஸ்டர்ஸ் அணிகளின் மோதல்<<

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரியின் முன்னாள் வீரர்கள் ஏற்பாடு செய்த, இரண்டு போட்டிகள் கொண்ட இந்த மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் மற்றும் தோமியன் மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று (5) மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்று (6) கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பானது.

அணிக்கு 25 ஓவர்களாக நடைபெற்ற இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால், எதிரணியினால் துடுப்பாட பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் அணியினர் 20 ஓவர்களுடன் தமது துடுப்பாட்டத்தினை நிறுத்தினர்.

அந்தவகையில் 20 ஓவர்கள் துடுப்பாடிய கொழும்பு இணைப்பு மாஸ்டர்ஸ் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களை குவித்தது.

அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பில் விஜயானந்த பெரேரா ஆட்டமிழக்காது ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், சுஜித் பெரேரா 34 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதேநேரம், யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் எதிரணியில் பறிபோன விக்கெட்டினை கிருபானந்தன் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், காலநிலை சீர்கேடு தொடர்ந்து நிலவிய இந்தப் போட்டியின் வெற்றி இலக்காக 20 ஓவர்களுக்கு 170 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடர்ந்து இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் திலிபன் 50 ஓட்டங்களைப் பெற்றிருக்க, தேவராஜன் 29 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இணைப்பு மாஸ்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் S. பெரேரா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இணைப்பு மாஸ்டர்ஸ் – 169/1 (20) விஜேயானந்த பெரேரா 76*, சுஜித் பெரேரா 34, கிருபானந்தன் 38/1

யாழ்ப்பாண மாஸ்டர்ஸ் – 107/4(20) திலிபன் 50, S. பெரேரா 18/2

முடிவு – இணைப்பு மாஸ்டர்ஸ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<