T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் கடமையாற்றவுள்ள இலங்கை நடுவர்கள்

74

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள T20  உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் நடுவர்கள் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (10) அறிவித்துள்ளது. 

ஐசிசியின் லீக் அடிப்படையிலான உலகக் கிண்ண T20 தொடருக்கான முதற்கட்ட தகுதிகாண் போட்டிகள் இம்மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் 2ம் திகதிவரை நடைபெறவுள்ளன. இந்தப் தொடருக்கான 3 போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் 12 நடுவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

10 ஓவர்களின் பின் எம்மால் சிறந்த தருணமொன்றை பெற முடியவில்லை – சர்பராஸ்

நேற்று (9) லாஹூரில் இடம்பெற்று முடிந்திருக்கும் ……

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள நடுவர்கள் பட்டியலில் இலங்கையின் இரண்டு நடுவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. லிண்டன் ஹெனிபல் மற்றும் ரவீந்திர விமலசிறி ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று T20i  உலகக் கிண்ணம் உட்பட 488 சர்வதேச போட்டிகளில் கடமையாற்றியுள்ள ஜெப் க்ரொவ்ன், தென்னாபிரிக்காவின் கெரி பீனார் மற்றும் முதல் பெண் போட்டி மத்தியஸ்தரான இந்தியாவின் ஜி.எஸ். லக்ஷ்மி ஆகியோர் போட்டி மத்தியஸ்தர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில், ஐசிசியின் முதல் பெண் போட்டி மத்தியஸ்தரான ஜி.எஸ். லக்ஷ்மி, முதன்முறையாக ஐசிசியினால் நடத்தப்படும் தொடரொன்றில் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளார். அதேநேரம், லீக் போட்டிகளுக்கான நடுவர்கள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் லீக் போட்டிகளின் நிறைவில் தெரிவுசெய்யப்படுவார்கள் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்த இளம் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு ………

அதேநேரம், இந்த தொடருக்கான நடுவர்கள் தெரிவு குறித்து ஐசிசியின் நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களுக்கான உயர் முகாமையாளர் ஏட்ரியன் கிரிப்பித் குறிப்பிடுகையில்,

“தகுதிகான் போட்டிக்கான காலப்பகுதியில் வேறு தொடர்கள் மற்றும் போட்டிகளில் கடமையாற்றாத, மிகச்சிறந்த நடுவர்கள் குழாம் ஒன்றை நாம் தெரிவுசெய்துள்ளோம். அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I   உலகக் கிண்ணத்துக்கான அணிகளை தெரிவுசெய்யும் ஆறு அணிகளுக்கு இடையிலான முக்கியமான தொடராக இது அமைகின்றது. இந்த நிலையில், நடுவர்கள் தங்களுடைய கடமையினை சிறப்பாக நிறைவேற்றுவர் என நம்புகிறேன்“ என்றார்.

போட்டி மத்தியஸ்தர்கள் – ஜெப் க்ரொவ்ன், ஜி.எஸ். லக்ஷ்மி, கெரி பீனார்

நடுவர்கள் – ரோலண்ட் ப்ளெக், க்ரிஸ் ப்ரொவ்ன், லிண்டன் ஹெனிபல், செம் நொகஸ்கி, அஹமட் சஹா பக்தீன், அல்லாஹூதீன் பலீகர், ரசீட் ரியாஸ், சுந்தரம் ரவி, அஷான் ரஷா, சர்பதுல்லா இப்னு சாஹிட், அலெக்ஸ் வார்ப், ரவீந்திர விமலசிறி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<