எவின் லுவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகளுக்கு ஹெட்ரிக் வெற்றி

161
@AFP

மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான எவின் லுவிஸின் அபார சதத்தின் உதவியுடன் அயர்லாந்து அணிக்கெதிரான  மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது

பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்..

கிரெனேடாவில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது

அயர்லாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் அன்டி போல்பெர்னி 71 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து வலுச்சேர்க்க, பந்துவீச்சில் ஹெய்டன் வோல்ஷ்  4 விக்கெட்டுக்களையும், ஷானே தோமஸ் 3 விக்கெட்டுக்களையும், ரொஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய போது மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. இதனையடுத்து 47 ஓவர்களில் 197 ஓட்டங்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  

இதன்படி, களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லுவிஸ் பெற்றுக் கொடுத்த அபார சதத்தின் உதவியால் 36.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.  

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 5 விக்கெட்டினால் வெற்றியீட்டி தொடரை 3க்கு 0 கைப்பற்றியது.

அணித்தலைவர் பதவியிலிருந்து விலக தயாராக இருக்கும் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான..

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய எவின் லுவிஸ் 97 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும், 6 பௌண்டரிகளும் அடங்கும்

அத்துடன் ஒருநாள் போட்டிகளில் தனது 3ஆவது சதத்தைப் பூர்த்தி செய்த அவர், சொந்த மண்ணில் முதலாவது சதத்தினைப் பதிவு செய்தார்

இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுளையும் எவின் லுவிஸ் பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், ஒருநாள் அரங்கில் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொண்ட 401ஆவது வெற்றியாக இது பதிவாகியதுடன், 15 தடவையாக ஒருநாள் தொடரொன்றைக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின், முதலாவது போட்டி நாளை மறுதினம் (15) கிரெனடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<