சந்தீப் ஷர்மா வேகத்தில் சிக்கி வீழ்ந்தது பெங்களுர்

220
IPL Round up

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் 43ஆவது லீக் போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓட்டங்களினால் த்ரில் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

பெங்களூர் ரோயல் செலஞ்சஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

சம்சன், பான்ட்டின் அதிரடியில் இமாலய இலக்கை விரட்டிய டெல்லி

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக மார்டின் குப்டில் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் களம் இறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்லா(1), குப்டில்(9) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர். இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஷோன் மார்ச்(20), வோரா(25), சஹா(21) ஆகியோர் ஓரளவு நம்பிக்கையளித்தனர்.

அணித் தலைவர் மெக்ஸ்வெல் 6 ஒட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், அடுத்து வந்த அக்சர் பட்டேல் அதிரடியாக 17 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன் காரணமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 139 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கெயில் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையிலும், விராட் கோலி(6), டிவிலியர்ஸ்(10), யாதவ்(6), வொட்சன்(3) ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

முக்கியமான அதிரடி ஆட்டக்காரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததன் காரணமாக அவ்வணி பெரிதும் அழுத்தத்தை எதிர்கொண்டது. எனினும், பெங்களூர் சார்பில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 46 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து 19 ஓவர்கள் முடிவில் 119 ஓட்டங்களுக்கு பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் sவெற்றி பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிலிருந்து அரவிந்த டீ சில்வா விலகல்

பஞ்சாப் அணி சார்பில் ஏ.ஆர். படேல் மூன்று விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், எம்.எம். ஷர்மா மற்றும் ஜி.ஜெ. மெக்ஸ்வெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 138/7(20) – அக்சேர் பட்டேல் 38(17), வோரா 25(28)

பெங்களூர் ரோயல் செலஞ்சஸ் 119(19) – மந்தீப் சிங் 46(40), நெகி 21(23), ஏ.ஆர். படேல் 11/3, சந்தீப் ஷர்மா 22/3