இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிலிருந்து அரவிந்த டீ சில்வா விலகல்

506
Aravinda De Silva

கடந்த சில வருடங்களாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு மற்றும் ஆலோசனை சபையில் சேவையாற்றி வந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டீ சில்வா தனது பணிகளிலிருந்து விலகியுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்வதற்கு தேவையான திறமைகள் இலங்கையிடம் உள்ளது – அலன் டொனால்ட்

‘வெள்ளை மின்னல்’ என்னும், சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படும் முன்னாள்..

தற்பொழுது 51 வயதான அரவிந்த டீ சில்வா, 2016ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் செயற்குழுவை தலைமை தாங்கியதுடன், இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன முறை பயிற்சியளிக்கும் கட்டமைப்பை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியிருந்தார்.

அவருடைய கிரிக்கெட் குறித்த தொலைநோக்கு பார்வையால், கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-0 என வைட் வொஷ் செய்தமை உள்ளடங்கலாக,   அணியை பல்வேறு விதத்தில் தரமுயர்த்தும் விதத்தில் செயற்பட்டார். அத்துடன், அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றியில் தனிப்பட்ட முறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இது குறித்த கருத்துக்களை மேலும் அறிந்து கொள்வதற்கு,  நேற்றைய தினம் அரவிந்த டீ சில்வாவை தொடர்புகொள்ள முயற்சித்தும் அது முடியாமல் போனது. எனினும், கிடைக்கப் பெற்றுள்ள செய்தி மூலங்களுக்கு அமைவாக, அண்மைய காலங்களில் பிரதான செயற்திட்டங்கள்  குறித்து   முடிவுகள் எட்டப்பட்ட நேரங்களில், அரவிந்த புறக்கணிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.

இது தவிர, அவர் கிரிக்கெட் செயற்பாட்டு குழுவின் பெரும் மதிப்பு மிக்க தலைமை பதவியை வகித்து, சிறப்பாக வழிநடாத்தியிருந்தார். எனினும், அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஏனைய சில முன்னணி அதிகாரிகள், தொடர்ந்தும் கிரிக்கெட் செயற்குழுவின் வழமையான செயல்பாட்டு கடமைகள் மற்றும் உத்தியோகபூர்வ  சந்திப்புக்கள் ஆகியவற்றை புறக்கணித்திருந்தனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அரவிந்த டீ சில்வா, அதிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையின் பல்வேறு விதமான செயல்பாடுகளில் பங்கெடுத்திருந்தார். முக்கியமாக, தேர்வாளர்களின் தலைமைப் பொறுப்பு மற்றும் கிரிக்கெட் செயற்பாட்டுக் குழுத் தலைவர் போன்ற பதவிகளை வகித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக செயற்பாட்டு முகாமையாளராக அருண டீ சில்வா

இவ்வாண்டு, இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு..

அத்துடன், அவருடைய பரபரப்பான சொந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்தியில், தனது பெறுமதியான நேரத்தினை இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்கியிருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் செயற்குழுவுக்கும் தனது அளப்பரிய சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் தெரிவாளர் குழுவில் 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அரவிந்த டீ சில்வா தலைமை வகித்த பொழுது, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அணித் தலைவராக செயல்பட்டிருந்தார். அவருடைய நேர்மை மற்றும் பங்களிப்பு போன்ற காரணங்களால் அப்பதவி தொடர்ந்தும் அவருக்கு வழங்கப்பட்டது.