த்ரில்லான போட்டியுடன் ஆரம்பமாகிய இந்த பருவகால ஐ.பி.எல். தொடர்

163
BCCI
 

மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர சகலதுறை வீரர் டேரன் பிராவோவின் சிறப்பாட்டத்தோடு, 2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். T20 தொடரின் முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியினை சென்னை சுபர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினால் வீழ்த்தியிருக்கின்றது.

கோடை காலத்தில் வறண்டு போகும் கிரிக்கெட் இரசிகர்களின் உள்ளங்களை குளிர்விக்கும், இந்தியன் பிரீமியர் லீக் (.பி.எல்) தொடரின் 11 ஆவது அங்கம் நேற்று (7) இந்தியாவின் மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகியது.  

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர

பணம் கொழிக்கின்ற இந்த T20 கிரிக்கெட் தொடரின் ஏற்பட்டாளர்கள், இந்தப் பருவகாலத்திற்கான தொடருக்கு கோலாகலமான ஆரம்ப நிகழ்வு ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆரம்ப நிகழ்வு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், பிரபு தேவா ஆகியோர் கண்கவரும் நடனங்களை வழங்கி அசத்தியதோடு (நடிகைகளான) தமன்னா பாடியா, இலங்கையைச் சேர்ந்த ஜெக்குலின் பெர்னாண்டஸ் போன்றோர் அழகுப் பதுமைகளாக வலம் வந்தனர். இதுதவிர, 40 வயதான இந்தியாவின் பிரபல்ய பாடகர்களில் ஒருவரான மிகா சிங்கின் இசைக் கச்சேரியும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்துபடைத்திருந்தது.

  • BCCI

உரிமையாளர்கள் பந்தயக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டர்கள் எனக்கூறி .பி.எல். தொடரின் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்த சென்னை சுபர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் அத்தடைகள் நீக்கப்பட்டு 2018ஆம் ஆண்டுக்கான தொடரில் மீண்டும் விளையாடுகின்றன.

இந்நிலையில் .பி.எல். தொடரின் முதல் போட்டி, ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற மைதானத்தின் சொந்தக்கார அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கும் நடைபெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுபர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர .

இதன்படி, அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது கெயில் என அழைக்கப்படும் ஈவின் லூயிஸ் ஆகியோருடன் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட களம் வந்திருந்தது.

ஈவின் லூயிஸ் ஓட்டமேதுமின்றி ஏமாற்ற சிறிது நேரத்துக்குள்ளேயே மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவும் 15 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

எனினும், மூன்றாம் விக்கெட்டுக்காக கைகோர்த்த இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஜோடி 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வலுச்சேர்த்தது. மும்பை அணியின் மூன்றாம் விக்கெட்டான சூர்யகுமார் 29 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் இஷான் கிஷானும் 40 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். தொடர்ந்து, மத்திய வரிசை வீரராக வந்த குருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தோடு மும்பை இந்தியன்ஸ் அணியினர்  20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள் குவித்துக் கொண்டனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற குருனால் பாண்டியா, வெறும் 22 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 5 பெளண்டரிகள் உள்ளடங்களாக 41 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

சென்னை அணியின் பந்துவீச்சு சார்பாக ஷேன் வோட்சன் 2 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாஹிர் மற்றும் டீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இங்கிலாந்து அணிக்கெதிரான உள்ளக டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

இலங்கை உள்ளக கிரிக்கெட் அணிக்கும், இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணிக்குமிடையில் .

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களினை 20 ஓவர்களுக்குள் பெற பதிலுக்கு ஆடிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அதோடு குறித்த தருணத்தில் சென்னை அணி வெற்றி பெற 42 பந்துகளுக்கு 82 ஓட்டங்களும் தேவைப்பட்டதால் மும்பை அணியே வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் துடுப்பாட்ட வீரராக வந்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் பிராவோ சிக்ஸர் மழை பொழியத் தொடங்கினார். இது போட்டியின் திருப்புமுனையாக மாறியதனால், சென்னை சுபர் கிங்ஸ் அணி வெற்றி இலக்கினை நோக்கி முன்னேறி இறுதியில், 19.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களினைப் பெற்று ஒரு விக்கெட்டினால் ஆட்டத்தின் வெற்றியாளர்களாக மாறியது.

சென்னை அணியின் துடுப்பாட்டத்தில், 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக வெறும் 30 பந்துகளுக்கு 68 ஓட்டங்களினை டேரன் பிராவோ விளாச, கேதர் ஜாதவும் பெறுமதிமிக்க 24 ஓட்டங்களினைப் பெற்றுத் தந்திருந்தார்.

மும்பை அணியின் பந்துவீச்சில் மயான்க் மார்க்கன்டே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்த போதிலும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பிராவோவுக்கு வழங்கப்பட இந்த அதிரடி வெற்றியுடன் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் .பி.எல். போட்டிகளில் விளையாடர்த சென்னை அணி சிறப்பான மீள்வருகை ஒன்றினை தந்திருக்கின்றது.

.பி.எல். தொடரில் இன்றைய போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் ஒரு போட்டியிலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் றோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிகள் அடுத்த போட்டியிலும் மோதவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் – 165/4 (20) சூர்யகுமார் யாதவ் 43(29), குருனால் பாண்டியா  41(22)*, ஷேன் வொட்சன் 29/2 (4)

சென்னை சுபர் கிங்ஸ் – 169/9 (19.5) டேரன் பிராவோ 68(30), கேதர் ஜாதவ் 24(22)*, மயாங்க் மார்க்கண்டே 23/3(4), ஹர்திக் பாண்டியா 24/4(4)

முடிவுசென்னை சுபர் கிங்ஸ் 1 விக்கெட்டினால் வெற்றி