த்ரில்லர் வெற்றியைப் பதிவு செய்த சன்ரைஸர்ஸ்

87

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 52ஆவது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 04 விக்கெட்டுக்களால் வீழ்த்தி த்ரில்லர் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் IPL தொடரில் இம்முறை 04ஆவது வெற்றியைப் பதிவு செய்து, சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் IPL புள்ளிப்பட்டியலில் 09ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

கில், ஷஹாவின் அதிரடி ஆட்டங்களுடன் குஜராத்துக்கு இலகு வெற்றி

ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்  அணிகள் இடையிலான IPL மோதல் நேற்று (07) ஜெய்ப்பூரில் ஆரம்பமாகியது.  போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர்கள் முதலில் துடுப்பாடும் வாய்ப்பினை தமக்காகப் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் ஜோஸ் பட்லர் மற்றும் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியோடு 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்கள் எடுத்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜோஸ் பட்லர் வெறும் 59 பந்துகளை எதிர் கொண்டு 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்கள் எடுத்து சதத்தை வெறும் 05 ஓட்டங்களால் தவறவிட்டார். இதேவேளை இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சாம்சன் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 215 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாத்தி ஆகியோரின் ஆகியோரின் ஆட்டங்களோடு வெற்றி இலக்கிற்கான பயணத்தில் சிறந்த ஆரம்பம் ஒன்றைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து விக்கெட்டுக்கள் பறிபோன போதும் கிளன் பிலிப்ஸ், மற்றும் அப்துல் சமது ஆகியோர் இறுதிநேர அதிரடியினை வெளிப்படுத்த, சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி போட்டியின் வெற்றி இலக்கை த்ரில்லான முறையில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களுடன் அடைந்தது.

போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களுக்கும் 41 ஓட்டங்கள் வெற்றிக்காக தேவைப்பட்ட நிலையில் களமிறங்கியிருந்த கிளன் பிலிப்ஸ் வெறும் 7 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுக்க, அப்துல் சமத் உம் 7 பந்துகளில் ஆட்டமிழக்காது 2 சிக்ஸர்கள் அடங்கலாக 17 ஓட்டங்கள் பெற்றார்.

இதேவேளை சன்ரைஸர்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே பிரகாசித்திருந்த அபிஷேக் சர்மா 34 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகளோடு 55 ஓட்டங்கள் எடுக்க, ராகுல் த்ரிபாட்டி 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகளோடு 47 ஓட்டங்கள் எடுத்தார்.

மதீஷ பத்திரனவின் எதிர்காலத் திட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் – கருத்து வெளியிட்டடோனி

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் 04 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அவரின் பந்துவீச்சு வீணானது. போட்டியின் ஆட்டநாயகனாக சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கிளன் பிலிப்ஸ் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

ராஜஸ்தான் றோயல்ஸ் – 214/2 (20) ஜோஸ் பட்லர் 95(59), சஞ்சு சாம்ஷன் 66(38)*

சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் – 217/6 (20) அபிஷேக் சர்மா 55(34), ராகுல் திரிபாட்டி 47(29)

முடிவு – சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் 04 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<