முதலில் ZERO ஆகி கடைசியில் HERO ஆன ராகுல் திவாட்டியா

348
IPL

கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் கடந்த 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியது. கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு நடைபெறுகின்ற இம்முறை ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் பிரகாசிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், அனைவரது எதிர்பார்ப்பினையும் பொய்யாக்கும் வகையில் இம்முறை .பி.எல் தொடரில் களமிறங்கியுள்ள இளம் வீரர்கள் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் நாளுக்கு நாள் அசத்தி வருவதுடன், பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.  

இமாலய இலக்கை கடந்து வரலாற்று சாதனை படைத்த ராஜஸ்தான்

இந்த நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ்லவன் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று (27) நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கிரிக்கெட் உலகிற்கு புதிய வீரர் ஒருவரை பரிசளித்துள்ளது ராஜஸ்தான் ரோயல்ஸ். அந்த வீரர் தான் ராகுல் திவாட்டியா.   

 ராகுல் திவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகமே ஆடிப்போய் உள்ளது. தற்போது, யார் இந்த ராகுல் திவாட்டியா என்று பலரும் தேடத் தொடங்கி உள்ளனர்

சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே ராஜஸ்தானின் வெற்றிக்கு ராகுல் திவாட்டியாவின் பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், அவரும் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பதை நேற்றைய போட்டியின் பிறகு பலருக்கும் தெரிய வந்தது

இதன்மூலம் சுமார் 6 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியிலும், .பி.எல் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த ராகுல் திவாடியா தான் யார் என்பதை நேற்று நிரூபித்து இருக்கிறார்.  

இந்தப் போட்டியில் 4ஆவது இலக்கத்தில் ராகுல் திவாட்டியா களமிறங்கிய போது பலரும் அவரை கேலி செய்தனர். அணியில் நிறைய ஹிட்டர்கள் இருக்கும் போது ராகுல் திவாட்டியாவை ஸ்மித் களமிறக்கியது ஏன் என்று எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். இது தவறான முடிவு என்றும் கூட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

அதேபோல், ஆரம்பத்தில் இருந்தே ராகுல் திவாட்டியா 0, 1, 0, 0, 0, 1, 1, 1, 1, 0, 0, 0, 0, 0, 1, 1, 1, 0, 0 மிக மேதுவான ஆட்டத்தை வெளிப்பத்தினார். அவர் எதிர்கொண்ட முதல் 23 பந்துகளில் 17 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்

இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தோல்வியை சந்திக்கும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அடுத்த நொடியில் தனக்குள் தூங்கிக் கொண்டு இருந்த பினிஷர் டோனியின் பாணியில் அதிரடி காட்டினார்

கடைசி மூன்று ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 51 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது அதிரடியாக 6, 0, 2, 1, 6, 6, 6, 6, 0, 6, 6, 0 என்று மொத்தமாக என்று சிக்ஸர் மழை பொழிந்தார்.  

இதில் குறிப்பாக, சிக்ஸர் மூலம் மட்டும் 42 ஓட்டங்களை அவர் எடுத்தார். அதுமாத்திரமின்றி, ஷெல்டன் கொட்ரல் வீசிய 18ஆவது ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து 30 ஓட்டங்களை எடுத்தார்

டோனியின் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீராங்கனை

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றியை இலாவகமாக தட்டிப்பறித்து  4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது

ரசிகர்கள் மட்டும் இந்த போட்டியை நேரில் பார்த்தால் சிக்ஸர் மழையை கண்டு களித்திருப்பார்கள். இரு அணிகளும் சேர்ந்து 29 சிக்ஸர்களை விளாசின. இதில் ராஜஸ்தான் அணி 18 சிக்ஸர்களையும், பஞ்சாப் அணி 11 சிக்ஸர்களையும் விளாசின.

இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்ஸன், ராகுல் திவாட்டியா, ஜொப்ரா ஆர்ச்சர் ஆகிய நால்வரும் தான். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தின் போக்கை கடைசி 3-வது ஓவரிலிருந்து திவாட்டியாவும், ஜொப்ரா ஆர்ச்சரும் மாற்றிவிட்டனர்

அதிலும், தனக்கு சிக்ஸர்கள் அடிக்கும் திறமையும் உண்டு என்பதை ராகுல் திவாட்டியா இந்தப் போட்டியில் நிரூபித்துக் காட்டினார்.

இந்தநிலையில், இந்த போட்டியின் முடிவை தொடர்ந்து கருத்து தெரிவித்த ராகுல் திவாட்டியா, தான் இவ்வளவு மோசமாக வேறு எந்த போட்டியிலும் விளையாடியது இல்லை என தெரிவித்துள்ளார்.

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

இது குறித்து திவேட்டியா மேலும் குறிப்பிடுகையில், நான் முதல் 20 பந்துகளை எதிர்கொள்ள கடுமையாக திணறினேன். நான் இதற்கு முன் இவ்வளவு மோசமாக வேறு எந்த போட்டியிலும் விளையாடியது கிடையாது.  

பயிற்சியின் போது நான் சிறப்பாக துடுப்பெடுத்தாடினேன். நான் ஆரம்பத்தில் திணறி கொண்டிருந்த போது எனது சக வீரர்களை பார்த்தேன். அவர்கள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. நான் சிறப்பாக சிக்ஸர் அடிப்பேன் என்பது அனைவருக்கும் தெரியும்

முதல் சிக்ஸ் அடிப்பது மட்டும் தான் சிரமம், ஒரு சிக்ஸர் அடித்துவிட்டால் அடுத்தடுத்து அடிப்பது மிக எளிது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர் விளாசவே பயிற்சியாளர்கள் என்னை இந்தப் போட்டியில் முன்னதாக களமிறக்கினார்கள். ஆனால், நான் லெக் ஸ்பின்னர்களின் பந்துகளில் அடிக்காமல் ஏனைய பந்துவீச்சாளர்களின் பந்துகளில் சிக்ஸர் அடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்

எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைகளைப் படைத்த ராகுல்

எனவே, இந்த போட்டி முடிந்ததில் இருந்து பலரும் யார் இந்த ராகுல் திவாட்டியா என்று தேடி வருகிறார்கள். ஹரியானாவைச் சேர்ந்த இவர் லெக் ஸ்பின் சகலதுறை வீரர். பெரிய அளவில் கிரிக்கெட் பின்னணியைக் கொண்டிருக்காத இவரது அப்பா ஒரு சட்டத்தரணி.  

படிப்பு தான் முக்கியம் என அப்பா தொல்லை கொடுத்தாலும், தனது மாமாவைப் போல விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவு ராகுல் திவாட்டியாவுக்கு சிறுவயதிலே ஏற்பட்டது. இதனால் நான்கு வயதில் துடுப்பு மட்டை கையில் எடுத்த அவரின் கனவை நனவாக்க அப்பாவே முன்வந்தார்

இதனையடுத்து தமது சொந்த ஊரில் உள்ள ஒரு கிரிக்கெட் அகடமியில் ராகுல் திவாட்டியாவை சேர்துவிட்டார். அங்குள்ள வீரர்களுடன் சேர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொண்ட அவர், விரைவிலே சிறந்ததொரு கிரிக்கெட் வீரராகவும் உருவெடுத்தார்.

பிற்காலத்தில் அவரை இந்தியாவின் முன்னாள் வீரரான விஜய் யாதவ்வின் கிரிக்கெட் அகடமியில் இணைத்துவிடுவதற்கு ராகுல் திவாட்டியாவின் அப்பா நடவடிக்கை எடுத்தார்.

Video – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்? | Cricket Kalam 46

அந்த அகடமியில் இணைந்துகொண்ட பிறகு தான் ராகுல் திவாட்டியா மிகச் சிறந்த சகலதுறை வீரராக உருவெடுத்தார்

தனது சொந்த மாநிலமான ஹரியானா கிரிக்கெட் அணியே இவரை பெரிய அளவில் மதிக்கவில்லை. எனினும் 2013இல் அந்த மாநில அணிக்காக அறிமுகத்தை பெற்றுக்கொண்ட ராகுல் திவாட்டியா 7 போட்டிகள் மட்டுமே அந்த மாநிலத்துக்காக விளையாடி உள்ளார்.

2014இல் ரஞ்சி போட்டிகளில் ஹரியானா அணிக்காக விளையாடினார். அதன்பின் விஜய் ஹசாரே போட்டித் தொடரில் ஹரியானா அணிக்காக விளையாடினார். முதல்தரப் போட்டிகளில் இவர் 91 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்துள்ளார். இதனால் இவர் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது.  

குறிப்பாக, .பி.எல் போட்டிகளிலும் இவருக்கு இதுவரை பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2014இல் இவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை அந்த அணி 10 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்தது.  

தோல்வியையும் தழுவி, தண்டனைக்கும் உள்ளான கோஹ்லி

அதன்போது, 3 போட்டிகளில் மட்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, அந்த அணியின் வலைப் பந்துவீச்சாளராக வலம்வந்த ராகுல் திவாட்டியாவை 2015இல் ராஜஸ்தான் அணி விடுவித்தது.  

இதனையடுத்து 2017இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் ஒப்பந்தமானார். அங்கும் அவருக்கு 3 போட்டிகளில் மாத்திரமே விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர், டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக 2018இல் விளையாடினார். ஆனால் அங்கும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த அணிக்காக 8 போட்டிகளில் விளையாடியிருந்தார்

இந்த நிலையில் 2019இல் இவர் மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வந்தார். .பி.எல் தொடரில் தன்னை நிரூபிக்க 6 வருடம் முயன்று இருக்கிறார். ஆனால் இவரை எந்த அணி நிர்வாகமும் சரியாக பயன்படுத்தவில்லை

கிரிக்கெட் உலகில் என்னை புறக்கணிக்கிறார்கள், தொடர்ந்து பல அணிகளுக்கு மாறுவதால் என்னை நிரூபிக்க முடியவில்லை என்று இவரே ஒரு முறை குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த முறை தன்னை .பி.எல் போட்டிகளில் நிரூபிக்க தொடங்கி உள்ளார். 6 வருடங்களாக இருந்த வலியை கடந்துள்ள ராகுல் திவாட்டியா, தற்போது தனது கிரிக்கெட் ஆட்டத்தை நோக்கி அனைவரையும் திருப்பி உள்ளார்

மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணையவுள்ள ஜேசன் ஹோல்டர்

தனக்கு போதுமான வாய்ப்புக்கள் கிடைக்காமல் மன வேதனையுடன் இருந்து வந்த ராகுல் திவாட்டியா, தன்னம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. வெறுமனே ஓரிரெண்டு .பி.எல் போட்டிகளில் விளையாடிய காரணத்தால் தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை

மீண்டும் முதல்தரப் போட்டிகளில் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்திய அவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியே மீண்டும் வாங்கியது.

எனவே, கடந்த காலங்களைப் போன்று அல்லாமல் இம்முறை .பி.எல் தொடரில் முதல் கட்டத்திலேயே கிடைத்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்திக் கொண்டு தன்னிடமும் அபரிமிதமான திறமை இருக்கின்றது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<