ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஹெரி கேர்னி, ஜேசன் ரோய் விலகல்

185

முழங்கை உபாதை காரணமாக ஐ.பி.எல் போட்டித் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஹெரி கேர்னி விலகியுள்ளார்.

அத்துடன், உடலின் இடது பக்கத்தில் ஏற்பட்ட வலி காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய் விலகிக் கொண்டார்.

எனவே ஹெர்ரி கேர்னிக்குப் பதிலாக மாற்றீடு வீரர் யார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படாவிட்டாலும், ஜேசன் ரோய்க்குப் பதிலாக அவுஸ்திரேலியாவின் டேனியல் சேம்ஸை ஒப்பந்தம் செய்யப்படுவதாக டெல்லி அணி அறிவித்துள்ளது.

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த .பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது

T20 யில் புதிய மைக்கல்லை எட்டிய டுவைன் ப்ராவோ

இந்த நிலையில், இம்முறை .பி.எல் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

.பி.எல் தொடரில் விளையாடவுள்ள அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றடைந்துள்ளடன், இவர்கள் இரு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இம்முறை .பி.எல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஹெரி கேர்னி விலகவுள்ளதாகத் அறிவித்துள்ளார்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துக்கு அவர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ள நிலையில், இம்முறை .பி.எல் மற்றும் T20I பிளாஸ்ட் ஆகிய போட்டித் தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

இதனால், .பி.எல் தொடரில் விளையாடுவதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வரமாட்டேன் கொல்கத்தா அணி நிர்வாகத்துக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Video – சாதனைகளால் அமர்க்களப்படுத்திய Chandi, Dili & Jimmy…!|Sports RoundUp – Epi 129

கடந்த வருடம் நடைபெற்ற .பி.எல் தொடரில் முதல்முறையாகக் களமிறங்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 33 வயதான ஹெரி கேர்னி, 8 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில், இம்முறை .பி.எல் தொடரில் ஜேசன் ஹோல்டர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் T20 தொடரிலிருந்து வெளியேறும் ஜேசன் ரோய்

இதனால் அவருக்குப் பதிலாக அவுஸ்திரேலியாவின் 27 வயதுடைய மித வேகப் பந்துவீச்சாளரான டேனியல் சேம்ஸை ஒப்பந்தம் செய்வதற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. புதிய வரவை வரவேற்க தாங்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளது

இதனிடையே ஐபிஎல் தொடரில் இணைவது குறித்து இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேனியல் சேம்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

.பி.எல் போன்ற பெரிய தொடரில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் அந்த தொடரை தாங்கள் மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்

இந்த ஆண்டு சீசனில் தன்னை இணைத்துக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், .பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு தான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் ஹாரிஸ்

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஷ் லீக் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக இடம்பிடித்த அவர், இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடாவிட்டாலும், 37 உள்ளூர் T20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன், கடந்த வருட பிக் பாஷ் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<