பாகிஸ்தான் T20 தொடரிலிருந்து வெளியேறும் ஜேசன் ரோய்

193

உபாதை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடரிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான ஜேசன் ரோய் விலகியுள்ளார்.

T20 யில் புதிய மைக்கல்லை எட்டிய டுவைன் ப்ராவோ

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்காக தெரிவாகிய இங்கிலாந்து வீரர்கள் குழாம் கடந்த வாரம் முதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறித்த பயிற்சிகளின் போது, ஜேசன் ரோய் தசை உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார்.

தொடர்ந்து பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த ஜேசன் ரோய் சத்திரசிகிச்சை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்களினால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இதனை அடுத்தே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிருக்கின்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, ஜேசன் ரோயிற்குப் பதிலாக பிரதியீட்டு வீரர் ஒருவரினை பெயரிடாத போதும் அவர் இங்கிலாந்து அணி அடுத்ததாக அவுஸ்திரேலிய அணியுடன் செப்டம்பர் 04ஆம் திகதி தொடக்கம் விளையாடவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னதாக பூரண உடற்தகுதியினை பெறுவார் எனத் தெரிவித்திருக்கின்றது.

டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் ஹாரிஸ்

இதேநேரம் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் விளையாடும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை (28) மன்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

தற்போதைய இங்கிலாந்து T20 குழாம் 

இயன் மோர்கன் (அணித்தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, டொம் பென்டன், சேம் பில்லிங்ஸ், டொம் கர்ரன், ஜோ டென்லி, லுவிஸ் க்ரேகெரி, கிறிஸ் ஜோர்டன், ஷாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், ஆதில் ரஷீட், டேவிட் வில்லி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<