அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார் கிராண்ட் எலியட்

737
Image courtesy - Arysports

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்த நியூசிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிராண்ட் எலியட், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக நேற்று (21) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரியஞ்சனின் சதத்தோடு T20 லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தம்புள்ளை

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்திருக்கும், உள்ளூர் T20…

இங்கிலாந்தில் மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் T-20 பிளாஸ்ட் தொடரில், பேர்மிங்கம் பியர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த எலியட், தங்களது அணி நொக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்த நிலையில், குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த இவர், உலகளாவிய ரீதியில் நடைபெற்று முதற்தர போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும் தனது 39வது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இவர் விடைபெற்றுள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கில் பிறந்த இவர், 1996ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்தார். பின்னர், நியூசிலாந்துக்கு சென்ற இவர், 2001ஆம் ஆண்டு முதல் அங்கு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக எலியட் 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து தேசிய அணிக்காக அறிமுகமாகினார்.  

இதுவரை 87 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 T-20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய இவர், அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். முக்கியமாக, நியூசிலாந்து அணியை முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் இவர் என்றால் அது மிகையாகாது.

கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான உலகக் கிண்ண அரையிறுதியில் 84 ஓட்டங்களை விளாசிய இவர், இரண்டு பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவையாக இருந்த நிலையில் சிக்ஸர் விளாசி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இவரது இந்த ஆட்டமானது நியூசிலாந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாகும்.

உபுல் தரங்கவின் கன்னி சதத்துடன் வெற்றியீட்டியது கொழும்பு

பல்லேகலை மைதானத்தில் கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின்…

கிராண்ட் எலியட் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் 34.06 என்ற சராசரியில் 1,976 ஓட்டங்களையும், 39 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒட்டுமொத்தமாக 150 T-20  போட்டிகளில் விளையாடி 2,209 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 112 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதேவேளை 83 முதற்தரப் போட்டிகளில் 3,883 ஓட்டங்களையும், 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை அவரது உத்தியோகபூர்வ இன்ஸ்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிராண்ட் எலியட்,

ஜொஹன்னஸ்பேர்க்கில் ஆரம்பித்த பயணம் பேர்மிங்கத்தில் முடிவடைகிறது.12 வயதாக இருக்கும் போது எனது குறிக்கோள், சர்வதேச கிரிக்கெட், ஒரு உலகக் கிண்ணம் மற்றும் கவுண்டி கிரிக்கெட் ஆகியவற்றில் விளையாட வேண்டும் என்பதுதான். கனவு நனவாகியது. 27 வருடங்களாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கழித்த ஒவ்வொரு நிமிடங்களையும் நான் ரசிக்கின்றேன். எனது வாழ்க்கை பயணத்தை இனிமையாக்கிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். அத்துடன் எனக்கு ஆதரவளித்த குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கும் மிகப்பெரிய நன்றிகள். அடுத்து ஒரு உற்சாகமான எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறேன்என குறிப்பிட்டுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<