அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ரையன் ஹாரிஸ் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 8 அணிகளும் துபாய் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை முழுமையாக போட்டிகளுக்காக தயார் செய்து வருகின்றன.
ஏற்கனவே டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், மொஹமட் கைய்ப், சாமுவேல் பத்ரி மற்றும் விஜய் தாஹியா உள்ளிட்டவர்கள் பயிற்சியாளர்களாக உள்ள நிலையில் தற்போது அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ரையன் ஹாரிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் திகதி அறிவிப்பு
முன்னதாக டெல்லி அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த ஜேம்ஸ் ஹோப்ஸ் சொந்த காரணங்களால் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மாற்றாக ரையன் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதே கிரிக்கெட் உலகில் மிகவும் தாமதமாக நுழைந்த ரையன் ஹாரிஸ், 27 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும், 21 ஒருநாள் போட்டியில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2009 முதல் 2015ஆம் ஆண்டுவரை அவுஸ்திரேலிய அணியில் சிறந்த பந்துவீச்சாளராக ஹாரிஸ் வலம்வந்தார்.
ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஹாரிஸ், 37 ஆட்டங்களில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக ஹாரிஸ் விளையாடினார்.
? ?????: ???????? ?? ???????? ????? ?
Former Australian fast bowler and IPL winner @r_harris413 has joined us as our new Bowling Coach for the #Dream11IPL ??
More details: https://t.co/TnLEY3z5F4#WelcomeRyan #YehHaiNayiDilli pic.twitter.com/Q7zOypef2p
— Delhi Capitals (Tweeting from ??) (@DelhiCapitals) August 25, 2020
அத்துடன், கடந்த 2009இல் ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் ரையன் ஹாரிஸ் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹாரிஸ் ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய தேசிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், பிக் பாஷ் டி20 லீக்கில், பிரிஸ்பேன் ஹீட், ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் அணிக்கும் பயிற்சியாளராக ஹாரிஸ் பணியாற்றியுள்ளார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டது குறித்து ஹாரிஸ் கூறுகையில்,
”மீண்டும் ஐ.பி.எல் தொடருக்குள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சார்ந்திருக்கும் அணி ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்ய மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அனைவருடனும் சேர்ந்து பணியாற்ற இன்னும் நான் காத்திருக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பொண்டிங்குடனும், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் சாமுவேல் பத்ரி, துடுப்பாட்டப் பயிற்சியாளராக மொஹமட் கைய்ப்புடனும், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஹாரிஸ் இணைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க