T20 யில் புதிய மைக்கல்லை எட்டிய டுவைன் ப்ராவோ

169
Dwayne Bravo
@GettyImage

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரர் டுவைன் ப்ராவோ, நேற்று (26) நடைபெற்ற போட்டியில் ரஹ்கீம் கார்ன்வோலின் விக்கெட்டை கைப்பற்றிய வேளையில் T20 போட்டிகளில் புதிய மைக்கல்லை எட்டினார்.

36 வயதுடைய மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான டுவைன் ப்ராவோ, கிரிக்கெட் உலகில் T20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட அதிகமாக T20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியன் ப்ரீமியர் லீக், கரீபியின் ப்ரீமியர் லீக், பிக்பேஷ், பாகிஸ்தான் சுப்பர் லீக், உள்ளிட்ட பெரும்பாலான லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்

>> டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் ஹாரிஸ்

இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் (சி.பி.எல்) தொடரில் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவைன் ப்ராவோ விளையாடி வருகிறார். அதன் அடிப்படையில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற லீக் போட்டியில் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் அணிசெயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது

இந்த போட்டியில் ட்ரிபான்கோ நைட் ரைடர்ஸ் வீரர் டுவைன் ப்ராவோ வீசிய பந்தில் செயிண்ட் லூக்கா சோகஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரஹ்கீம் கார்ன்வோல் 18 ஓட்டங்களுடன் கொலின் முன்ரோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் T20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ப்ராவோ பெற்றார்

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் T20 போட்டிகளில் விளையாடிவரும் டுவைன் ப்ராவோ இதுவரையில் 459 போட்டிகளில் விளையாடி இரு ஐந்து விக்கெட்டுகளுடன் மொத்தமாக 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  

>> லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் திகதி அறிவிப்பு

T20 கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கிய டுவைன் ப்ராவோ தற்போது 500 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார். இதுவரையில் 400 T20 விக்கெட்டுகளை எந்தவொரு பந்துவீச்சாளரும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டுவைன் ப்ராவோவுக்கு அடுத்ததாக 295 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கையின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க 390 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகிறார். இதேவேளை கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து வருடா வருடம் நடைபெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் டுவைன் ப்ராவோ தட்டிச்சென்றுள்ளார்.  

இதுவரையில் 73 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் ப்ராவோ 101 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் காணப்படுகிறார். 79 போட்டிகளில் 92 விக்கெட்டுகளை வீழ்த்திய ரியாத் எம்ரிட் இரண்டாமிடத்தில் காணப்படுகிறார்.