சம்சனின் கன்னி சதத்துடன் டெல்லி அணிக்கு வெற்றி

519
Pune vs Delhi

பத்தாவது பருவகாலத்திற்கான .பி.எல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இளம் வீரர் சம்சனின் அபார சதம் மற்றும் சஹீர் கானின் சிறந்த பந்து வீச்சு என்பவற்றினால் டெல்லி டேர்டேவில்ஸ் அணி ரைசிங் புனே சுபர்ஜியண்ட் அணியை 97 ஓட்டங்களினால் அபார வெற்றி கொண்டுள்ளது.

சொந்த மண்ணில் வெற்றியை ருசித்த ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ்

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ள பத்தாவது பருவகாலத்திற்கான…

புனே மஹாராஷ்ட்ரா கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் களத்திற்கு வந்த இளம் வீரர் சஞ்சு சம்சனின் அதிரடி ஆட்டத்தால் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.   எதிரணியின் பந்து வீச்சைத் தகர்த்த சம்சன், 63 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்களாக 102 ஓட்டங்களைப் பெற்று, T-20 யில் தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்தார்.  

அவரைத் தொடர்ந்து கிறிஸ் மொர்ரிஸ் வெறும் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 38 ஓட்டங்களைச் சேர்க்க, டெல்லி டேர்டேவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைக் குவித்தது.

இதையடுத்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய புனே அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் சார்பாக மயான்க் அகர்வால் அதிகபட்சமாக 18 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்த புனே அணியில் ஏனைய வீரர்கள் அனைவருமே சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினர். இறுதியில் அவ்வணி 16 ஓவர்களில் 108 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இயற்கை எய்தினார் இலங்கை கிரிக்கெட்டின் மூத்த வீரர் பேர்டி விஜேசிங்க

இலங்கையின் பழம்பெரும் கிரிக்கெட் வீரரான பேர்ட்டி விஜேசிங்க கடந்த சனிக்கிழமை..

டெல்லி அணி சார்பாக பந்து வீச்சுத் துறையில் மிகவும் சிறப்பாக செயற்பட்டிருந்த அமித் மிஷ்ரா வெறும் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அணித் தலைவர் சஹீர் கான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கம்மின்ஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன்மூலம் டெல்லி டேர்டேவில்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் – சஞ்சு சாம்சன் (டெல்லி டேர்டேவில்ஸ்)

போட்டியின் சுருக்கம்

டெல்லி டேர்டேவில்ஸ் – சஞ்சு சாம்சன் 102(63), மொர்ரிஸ் 38(9), இம்ரான் தாஹிர் 24/1, சாஹர் 35/1

ரைசிங் புனே சுபர்ஜியண்ட் – மயான்க் அகர்வால் 20(18), அமித் மிஷ்ரா 11/3, சஹீர் கான் 20/3,