ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இன்று (07) தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 102 ஓட்டங்களால் தோல்வியினைத் தழுவியிருக்கின்றது.
முன்னதாக டெல்லி அரூண் ஜைட்லி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தென்னாபிரிக்காவிற்கு வழங்கியிருந்தார்.
>>முதல் போட்டியில் தீக்ஷனவை இழக்கும் இலங்கை கிரிக்கெட் அணி
இப்போட்டிக்காக இலங்கை அணி பூரண உடற்தகுதியினைப் பெற்ற குசல் பெரேராவிற்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக டில்சான் மதுசங்க உள்வாங்கப்பட்டு சுழல்வீரரான மகீஷ் தீக்ஷனவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை XI
குசல் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மதீஷ பதிரன, டில்சான் மதுசங்க, கசுன் ராஜித
தென்னாபிரிக்கா XI
குயின்டண் டி கொக், டெம்பா பவுமா (தலைவர்), ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன், எய்டன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கெரால்ட் கொயேட்சே, கேசவ் மஹராஜ், லுங்கி ன்கிடி, ககிஸோ றபாடா
இதன் பின்னர் நாணய சுழற்சிக்கு முடிவுக்கு அமைவாக துடுப்பாட்டத்தினை தொடங்கிய தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெம்பா பவுமா மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோர் களம் வந்தனர். டெம்பா பவுமா 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டினை கைப்பற்றி டில்சான் மதுசங்க இலங்கைக்கு சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், அவ்வணியின் இரண்டாம் விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக குயின்டன் டி கொக் மற்றும் ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் ஆகியோர் அபாரமான முறையில் 204 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பின்னர் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் விக்கெட்டாக குயின்டன் டி கொக் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் தன்னுடைய 18ஆவது ஒருநாள் சதத்தினைப் பதிவு செய்த அவர் 84 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன் சதம் பூர்த்தி செய்ததோடு அது அவரின் 5ஆவது ஒருநாள் சதமாக அமைந்திருந்தது. துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த டஸ்ஸன் 110 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து களம் வந்த எய்ட்டன் மார்க்கம் அதிரடியாக ஆடத் தொடங்கியிருந்ததோடு வெறும் 49 பந்துகளில் சதம் விளாசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரராக புதிய சாதனையினை நிலைநாட்டியிருந்தார். தொடர்ந்து எய்ட்டன் மார்க்கரமின் சதத்தோடு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து அபாரமான முறையில் 428 ஓட்டங்கள் எடுத்தது. அத்துடன் இது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் எய்டன் மார்க்ரம் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகள் அடங்கலாக 106 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் இறுதிநேர அதிரடியினை வெளிக்காட்டிய டேவிட் மில்லர் 21 பந்துகளில் ஆட்டமிழக்காது 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் பெற்றார்.
>>முதல் போட்டியை தவறவிடும் சுப்மான் கில்!
இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க கசுன் ராஜித, மதீஷ பதிரன மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 429 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டினை அவர் ஓட்டங்கள் ஏதுமின்றி பறிகொடுத்த போதும் புதிய வீரராக களம் நுழைந்த குசல் மெண்டிஸ் அதிரடியான ஆட்டத்தோடு இலங்கை அணிக்கு மிகச் சிறந்த ஆரம்பத்தினை வழங்கியிருந்தார்.
எனினும் துரதிஷ்டவசமாக அவரின் விக்கெட் ககிஸோ றபாடாவின் பந்துவீச்சில் பறிபோனது. வெறும் 42 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்ட குசல் மெண்டிஸ் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றதோடு, இப்போட்டியின் மூலம் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் 25 பந்துகளில் அரைச்சதம் பெற்று இலங்கை அணிக்காக அதிவேகமாக அரைச்சதம் பெற்ற வீரராக மாறியிருந்தார்.
இதன் பின்னர் இலங்கை அணியின் ஏனைய முன்வரிசை வீரர்களான சதீர சமரவிக்ரம, தனன்ஞய டி சில்வா ஆகியோர் ஏமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்திச் சென்ற போதும் இலங்கை அணியின் ஆறாவது விக்கெட்டுக்காக அணித்தலைவர் தசுன் ஷானக்கவுடன் ஜோடி சேர்ந்த சரித் அசலன்க 82 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்ததோடு, பின்னர் அவர் ஆட்டமிழக்க முன்னதாக அரைச்சதம் பூர்த்தி செய்து 65 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடர்ந்த ஆட்டத்தில் தசுன் ஷானக்க இலங்கை அணிக்காக அரைச்சதம் பெற்று ஆறுதல் ஒன்றினை வழங்கிய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியானது 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 326 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவர் தசுன் ஷானக்க தன்னுடைய 3ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் கெரால்ட் கொயேட்ஷே 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மார்கோ ஜான்சேன், ககிஸோ றபாடா மற்றும் கேசவ் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க வீரர் எய்ட்டன் மார்க்ரம் தெரிவாகினார்.
உலகக் கிண்ணத்தினை தோல்வியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணியானது தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) எதிர்கொள்ளவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Quinton de Kock | c Dhananjaya de Silva b Matheesha Pathirana | 100 | 84 | 12 | 3 | 119.05 |
Temba Bavuma | lbw b Dilshan Madushanka | 8 | 5 | 2 | 0 | 160.00 |
Rassie van der Dussen | c Sadeera Samarawickrama b Dunith Wellalage | 108 | 110 | 13 | 2 | 98.18 |
Aiden Markram | c Kasun Rajitha b Dilshan Madushanka | 106 | 54 | 14 | 3 | 196.30 |
Heinrich Klaasen | c Dasun Shanaka b Kasun Rajitha | 32 | 20 | 1 | 3 | 160.00 |
David Miller | not out | 39 | 21 | 3 | 2 | 185.71 |
Marco Jansen | not out | 12 | 7 | 0 | 1 | 171.43 |
Extras | 23 (b 0 , lb 1 , nb 1, w 21, pen 0) |
Total | 428/5 (50 Overs, RR: 8.56) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 10 | 1 | 90 | 1 | 9.00 | |
Dilshan Madushanka | 10 | 0 | 86 | 2 | 8.60 | |
Dasun Shanaka | 6 | 0 | 36 | 0 | 6.00 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 39 | 0 | 9.75 | |
Matheesha Pathirana | 10 | 0 | 95 | 1 | 9.50 | |
Dunith Wellalage | 10 | 0 | 81 | 1 | 8.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | b Marco Jansen | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Kusal Perera | b Marco Jansen | 7 | 15 | 1 | 0 | 46.67 |
Kusal Mendis | c Heinrich Klaasen b Kagiso Rabada | 76 | 42 | 4 | 8 | 180.95 |
Sadeera Samarawickrama | c Marco Jansen b Gerald Coetzee | 23 | 19 | 3 | 1 | 121.05 |
Charith Asalanka | c Reeza Hendricks b Lungi Ngidi | 79 | 65 | 8 | 4 | 121.54 |
Dhananjaya de Silva | c Andile Phehlukwayo b Keshav Maharaj | 11 | 14 | 1 | 0 | 78.57 |
Dasun Shanaka | b Keshav Maharaj | 68 | 62 | 6 | 3 | 109.68 |
Dunith Wellalage | c Heinrich Klaasen b Gerald Coetzee | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kasun Rajitha | c Aiden Markram b Gerald Coetzee | 33 | 31 | 4 | 1 | 106.45 |
Matheesha Pathirana | b Kagiso Rabada | 5 | 16 | 1 | 0 | 31.25 |
Dilshan Madushanka | not out | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Extras | 20 (b 0 , lb 5 , nb 1, w 14, pen 0) |
Total | 326/10 (44.5 Overs, RR: 7.27) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lungi Ngidi | 8 | 1 | 49 | 1 | 6.12 | |
Marco Jansen | 10 | 0 | 92 | 2 | 9.20 | |
Kagiso Rabada | 7.5 | 0 | 50 | 2 | 6.67 | |
Keshav Maharaj | 10 | 0 | 62 | 2 | 6.20 | |
Gerald Coetzee | 9 | 0 | 68 | 3 | 7.56 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<