வெஸ்ட் ஹாமை வென்று கிண்ணத்தை நெருங்கும் லிவர்பூல்

57
 

நீண்ட காலத்திற்குப் பின் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்ல காத்திருக்கும் லிவர்பூல் அணி வெஸ்ட் ஹாம் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று அந்த இலக்கை மேலும் நெருங்கியுள்ளது. 

தனது சொந்த மைதானமான அன்பீல்டில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் முதலிடத்தில் இருக்கும் லவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ள நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியை விடவும்  22 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 

ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 …..

லிவர்பூல் அணிக்கு இன்னும் 11 போட்டிகள் இருக்கும் நிலையில் மேலும் 12 புள்ளிகளை பெற்றால் 30 ஆண்டுகளின் பின்னர் ப்ரீமியர் லீக் சம்பியனாக முடியும். அந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு அடுத்த நான்கு போட்டிகளில் வெற்றியீட்டினால் போதுமானதாகும்.  

அதேபோன்று, அன்பீல்டில் லிவர்பூல் அணி தொடர்ச்சியாகப் பெறும் 21 ஆவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 1972 ஆம் ஆண்டு அந்த அணி படைத்த இங்கிலாந்து முன்னணி லீக்கில் சொந்த மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வென்ற சாதனையை முறியடித்துள்ளது. இந்த வெற்றியானது ப்ரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் வெற்றியீட்டிய சிட்டி அணியின் சாதனையை சமன் செய்வதாகவும் இருந்தது. 

மறுபுறம் வெஸ்ட் ஹாம் யுனைடட் இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் 27 போட்டிகளில் 24 புள்ளிகளை பெற்று தகுதி இழப்பு நிலையான 18 ஆவது இடத்தில் உள்ளது. 

வழக்கம்போல் ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் ஒன்பதாவது நிமிடத்தில்  ட்ரென்ட் அலெக்சான்டர் ஆர்னோல்ட் பரிமாற்றிய பந்தை ஜோர்ஜினோ விஜ்லன்டும் தலையால் முட்டி பெற்ற கோல் மூலம் முன்னிலை பெற்றது. 

எனினும், மூன்று நிமிடங்கள் கழித்து ரொபர்ட் ஸ்னோக்ரஸின் கோனர் கிக்கை இஸ்ஸா டியோப் தலையால் முட்டி கோலாக மாற்றியதன் மூலம் வெஸ்ட் ஹாம் கோல் நிலையை சமன் செய்தது. இதன்மூலம் முதல் பாதிய ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவுற்றது.

முதல் பாதி: லிவர்பூல் 1 – 1 வெஸ்ட் ஹாம் யுனைடட்

இடைவேளைக்கு 9 நிமிடங்களின் பின் வெஸ்ட் ஹாம் சார்பில் டெக்லன் ரைஸ் தொலைவில் இருந்து வழங்கிய பந்தை பதில் வீரர் பப்லோ போர்னால்ஸ் கோலாக மாற்றியபோதும் லிவர்பூல் ரசிகர்கள் அதிர்ச்சியுற்றனர். 27 லீக் போட்டிகளில் தோல்வியுறாமல் இருக்கும் லிவர்பூல் அந்த கௌரவத்தை காத்துக் கொள்வதற்காக பதில் கோல் திருப்பும் முயற்சியில் தீவிரம் காட்டியது. 

இந்நிலையில் வெஸ்ட் ஹாம் கோல்காப்பளர் லூகாஸ் பபியன்ஸ்கி செய்த தவறினால் லிவர்பூல் அணிக்கு பதில் கோல் திருப்ப முடிந்தது. அன்டி ரொபட்சனிடம் இருந்து வந்த பந்தை மொஹமட் சலாஹ் உதைத்தபோது போலாந்து கோல்காப்பாளரின் கால்கள் வழியாக ஊர்ந்து வலைக்குள் சென்றது.          

வெஸ்ட் ஹாம் கோல்காப்பாளர் பபியன்ஸ் மீண்டும் ஒருமுறை தவறிழைக்க லிவர்பூல் அணிக்கு வெற்றி கோலை பெற உதவியது. அவர் தனது எல்லையில் இருந்து வெளியேவர அலெக்சாண்டர் ஆர்னோல்ட் அவரை முறியடித்து பந்தை சாடியோ மானேவிடம் வழங்க மானே நெருக்கடி இன்றி கோலாக மாற்றினார். 

1000ஆவது போட்டியில் விளையாடிய ரொனால்டோ: அடுத்தடுத்து 4 கோல்கள் பெற்ற மெஸ்ஸி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா ….

அலெக்சாண்டர் ஆர்னோல்ட் வழங்கிய கோல் உதவியானது இந்த பருவதில் 12 ஆவது தடவையாகும். இது கடந்த பருவத்தின் சாதனையை சமப்படுத்துவதாக இருந்தது. இது பின்கள வீரர் ஒருவரின் சாதனை கோல் உதவிகளாகும். 

86 ஆவது நிமிடத்தில் மானே மீண்டும் ஒரு முறை பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் வீடியோ உதவி நடுவர் மூலம் ஆராயப்பட்டு அந்த கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.  

லிவர்பூல் அணியின் எதிர்வரும் போட்டிகளில் வட்போர்ட், போர்ன்மௌத், எவர்டன், கிறிஸ்டல் பளஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களும் உள்ளடங்குகின்றன. ஒருவேளை முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் மற்றும் மன்செஸ்டர் சிட்டி இரு அணிகளும் எதிர்வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மார்ச் 21 ஆம் திகதி கிறிஸ்டல் பளஸ் அணிக்கு எதிரான போட்டியில் லிவர்பூல் சம்பியன் பட்டத்தை வென்றுவிடும். அவ்வாறு நிகழ்ந்தால் முன்கூட்டியே சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் லிவர்பூல் சாதனை படைக்கும்.    

முதல் பாதி: லிவர்பூல் 3 – 2 வெஸ்ட் ஹாம் யுனைடட்

கோல் பெற்றவர்கள்

  • லிவர்பூல் – ஜோர்ஜினோ விஜ்லன்டும் 9’, மொஹமட் சலாஹ் 68’, சாடியோ மானே 81’
  • வெஸ்ட் ஹாம் யுனைடட் – இஸ்ஸா டியோப் 12’, பப்லோ போர்னால்ஸ் 54’ 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<