அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் முன்னணி வீரர்கள்!

England tour of Australia 2022

2595

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முதல் T20I போட்டியிலிருந்து முன்னணி வீரர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் முதல் போட்டியிலிருந்து ஜோஷ் ஹெஷல்வூட், மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் அடம் ஷாம்பா ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

>> T20 உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இரண்டு இலங்கையர்

எவ்வாறாயினும் இந்த வீரர்கள் அனைவரும் T20 உலகக்கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ளதால், இரண்டாவது T20I போட்டியுடன் அணியில் இணைந்துக்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள மேற்குறித்த வீரர்களுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேன் ரிச்சட்சன், அஷ்டன் ஆகர், மிச்சல் ஸ்வெப்சன்  மற்றும் நேதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் முதல் போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்னர். இதில் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேன் ரிச்சட்சன் மற்றும் அஸ்டன் ஆகர் ஆகிய மூன்று வீரர்கள் மாத்திரம் இரண்டாவது மற்றும் மூன்றாவது T20I போட்டிக்கான குழாத்தில் தொடர்ந்தும் இணைக்கப்படுவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது T20I போட்டிகளுக்கான குழாத்தில் T20 உலகக்கிண்ணத்துக்கான வீரர்கள் இணைக்கப்பட்டுள்ள போதும், கடந்தகாலமாக சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் கெமரூன் கிரீன் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டிக்கான குழாம்

ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர், கெமரூன் கிரீன், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஷ், டேனியல் சேம்ஸ், சீன் எபோட், அஸ்டன் ஆகர், மிச்சல் ஸ்வெப்சன், நேதன் எல்லிஸ், கேன் ரிச்சட்சன்

இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிக்கான குழாம்

ஆரோன் பின்ச், டேவிட் வொர்னர், கெமரூன் கிரீன், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளேன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், டேனியல் சேம்ஸ், சீன் எபோட், அஸ்டன் ஆகர், மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ், ஜோஷ் ஹெஷல்வூட், அடம் ஷாம்பா, கேன் ரிச்சட்சன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<