உலகக் கிண்ணப் போட்டிக்கான பயிற்சிகளை இரத்து செய்த பங்களாதேஷ்

ICC ODI World Cup 2023

1999
ICC ODI World Cup 2023

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இன்று (03) வெள்ளிக்கிழமை உலகக் கிண்ணத் தொடருக்காக டெல்லியில் மேற்கொள்ளவிருந்த பயிற்சிகளை இரத்துச் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் திங்கட்கிழமை (06) இலங்கை கிரிக்கெட் அணியினை எதிர்கொள்வதற்காக கடந்த புதன்கிழமை டெல்லி நகருக்கு வருகை தந்திருந்தது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்காக இன்று டெல்லியில் பயிற்சி பெற மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்த போதும், இந்த பயிற்சியினை பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நிர்வாகம் டெல்லியில் நிலவி வரும் வளி மாசாக்கம் காரணமாக இரத்துச் செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

>>நியூசிலாந்து அணியுடன் இணையும் வேகப்பந்துவீச்சாளர்

டெல்லியில் நிலவி வருகின்ற கடுமையான வளி மாசாக்கம் காரணமாக அங்கே பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதோடு மக்களின் ஏனைய அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை நாளை (04) மீண்டும் பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு பயிற்சிகளை தொடரும் என அணியின் முகாமையாளரான காலேத் மஹ்மூட் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேநேரம் இலங்கை அணியும் நாளைய தினம் டெல்லியில் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் இலங்கையின் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<