செல்சியை சமன் செய்தது ஆர்சனல்: சிட்டிக்கு பரபரப்பு வெற்றி

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,  

செல்சி எதிர் ஆர்சனல்

பத்து வீரர்களுடன் ஆடிய ஆர்சனல் பரபரப்பான செல்சி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் பதில் கோல் திருப்பி தீர்க்கமான ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை செய்தது. 

லிவர்பூலுக்கு மற்றொரு வெற்றி: மெஸ்ஸி கோலால் வென்றது பார்சிலோனா

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றன………..

தனது சொந்த மைதானமான ஸ்டான்ட்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் செல்சி அணியால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆரம்பத்திலேயே டேவிட் லுவிஸ் பெனால்டி பகுதிக்குள் தவறிழைத்து சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதோடு செல்சிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதனைப் பயன்படுத்தி ஜோர்கின்ஹோ 28 ஆவது நிமிடத்தில் கோல் பெற்றார். இதன்மூலம் முதல் பாதியில் செல்சி அணியால் முன்னிலை பெற முடிந்தது.     

எனினும் 63 ஆவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்ற காப்ரியல் மார்டினல்லி எதிரணி கோல்காப்பாளர் கெபா அரிசபலாகாவை முறியடித்து ஆர்சனல் சார்பில் பதில் கோல் திருப்பினார். 

போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்தபோதும் செல்சி அணித்தலைவர் செசர் அஸ்பிலிகுடா 84ஆவது நிமிடத்தில் கோல் திருப்பி தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். 

AFC தகுதிகாண் மோதலில் பாரோ அணியை சந்திக்கும் டிபெண்டர்ஸ்

இலங்கையின் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் AFC…….

எனினும் ஆர்சனல் போட்டியை விட்டுக்கொடுக்காமல் போராட அந்த அணியின் தலைவர் ஹெக்டர் பெல்லரின் இரு பின்கள வீரர்களை முறியடித்து போதுமான இடைவெளியை பெற்று மூன்று நிமிடங்களின் பின் பதில் கோல் திருப்பினார். 

இதன்மூலம் செல்சி தனது நான்காவது இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு ஆர்சனல் 10ஆவது இடத்தில் நீடிக்கிறது. 

மன்செஸ்டர் சிட்டி எதிர் செபீல்ட் யுனைடட்

ப்ரமோல் லேனில் நடைபெற்ற போட்டியில் செபில்ட் யுனைடட்டின் கடும் சவாலுக்கு மத்தியில் செர்கியோ அகுவேரோவின் அடைசி நேர கோல் மூலம் மன்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றது.  

நடப்புச் சம்பியனான சிட்டிக்கு எதிராக போட்டியை சமநிலை செய்வதில் செபீல்ட் யுனைடட் கடுமையாக போராடியதை பார்க்க முடிந்தது. முதல் பாதியில் காப்ரியல் ஜேசுஸின் பெனால்டியை டீன் அன்டர்சன் சிறப்பாக தடுத்ததோடு மேலும் பல கோல் முயற்சிகளையும் முறியடித்தார். 

Photos: Defenders FC (SRI) v Paro FC (BHU) | Pre-Match Press Conference | 1st Leg | AFC Cup 2020

எனினும் இருக்கையில் இருந்து வந்த அகுவேரோ, கெவின் டி ப்ருயினிடம் இருந்து வந்த பந்தை பெற்று வலைக்குள் தட்டிவிட்டு 73ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டிக்கு தேவையான வெற்றி கோலை புகுத்தினார். 

எனினும் செபீல்ட் யுனைடட் பொன்னான வாய்ப்பு ஒன்றை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஒலி மக்பேர்னி கோல் நிலையை நோக்கி பந்தை எடுத்துக் சென்றபோதும் தடுப்பதற்கு யாரும் இல்லாத வலைக்குள் புகுத்துவதற்கு முடியாமல் போனது. 

இந்த வெற்றியுடன் மன்செஸ்டர் சிட்டி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் தனது இரண்டாவது இடத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த அணி முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும்  13 புள்ளிகள் பின்தங்கி 51 புள்ளிகளுடன் உள்ளது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<