2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்

714
england-national-team

உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற பெருமையை பெற்றிருந்தபோதும் 1966 உலக சம்பியனான இங்கிலாந்து கால்பந்து அணியால் 1990 இல் இருந்து அரையிறுதியை தாண்டி முன்னேற முடியவில்லை.  

இந்த மூன்று சிங்கங்கள் இம்முறை ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் தமது 15ஆவது முறையான உலகக் கிண்ண பங்கெடுப்பாக விளையாடவுள்ளது. நவீன கால்பந்து சமூகத்தின் முன்னோடி தேசமான இங்கிலாந்து திறமையான இளம் வீரர்களைக் கொண்ட குழாமின் மூலம் நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது.    

உலகக் கிண்ணத்தின் வரலாற்றுக் கதை

பிஃபா என்ற வார்த்தையைத் தெரியாத விளையாட்டு ஆர்வளர்கள் இன்று இருக்கின்றனர் என்றார் அது

உலகக் கிண்ண வரலாறு

வெம்ப்ளியில் தனது சொந்த மண்ணில் பலம்கொண்ட மேற்கு ஜெர்மனியை மேலதிக நேரத்தில் வீழ்த்திய இங்கிலாந்து 1966 இல் கடைசியாக உச்ச விருதை வென்றது.    

1950 – முதல் சுற்று

1954 – காலிறுதி

1958 – முதல் சுற்று

1962 – காலிறுதி

1966 – சம்பியன்

1970 – காலிறுதி

1974 – தகுதி பெறவில்லை

1978 – தகுதி பெறவில்லை

1982 – முதல் சுற்று

1986 – காலிறுதி

1990 – அரையிறுதி

1994 – தகுதி பெறவில்லை

1998 – 16 அணிகள் பங்கு கொள்ளும் சுற்று

2002 – காலிறுதி

2006 – காலிறுதி

2010 – 16 அணிகள் பங்கு கொள்ளும் சுற்று

2014 – முதல் சுற்று

1954 இல் இங்கிலாந்து அணி உருகுவேயால் வெளியேற்றப்பட்டதோடு 1962 இல் சம்பியன் அணியான பிரேசிலினால் வெளியேற்றப்பட்டது. 1970 இல் இங்கிலாந்து மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னெறியபோதும் மேற்கு ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டது. அது 1966 இல் தோற்றதற்கு பதிலடி கொடுப்பதாக இருந்தது.  

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணத்தை வெல்லும் கோலை புகுத்திய ஜெர்மனி

1986 இல் டியாகோ மரடோனா இங்கிலாந்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு, 1990இல் மீண்டும் ஜெர்மனி அவர்களை அரையிறுதியில் பெனால்டிகள் மூலம் தோற்கடித்தது. அது தொடக்கம் இங்கிலாந்துக்கு கடினமான தொடர்களாகவே உலகக் கிண்ணம் இருந்தன. அன்று தொடக்கம் இன்று வரை அவர்கள் காலிறுதியை தாண்டியதில்லை.  

இம்முறை எவ்வாறு தகுதி பெற்றது?

தற்போது உலக தரவரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து 10 தகுதிகாண் போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 2 சமநிலை என்று தோல்வியுறாத அணியாகவே உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது. இந்த பயணத்தின்போது இரு தடவைகள் பயிற்சியாளர்களை மாற்றியதோடு இடைக்கால முகாமையாளர் கரெத் சௌத்கேட்டுடன் கடைசியில் தகுதியை பெற்றது.

அணியின் முன்கள வீரர்களின் தாக்குதல் ஆட்டம் பற்றி கேள்விகள் உள்ளன. ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கிய, லிதுவேனியா, மோல்டா மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற குழுநிலை அணிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் மொத்தமாக வெறும் 18 கோல்களையே பெற்றபோதும், வலுவான தற்காப்பை கொண்டிருப்பதால் 3 கோல்களை மாத்திரமே விட்டுக் கொடுத்துள்ளனர். தகுதிகாண் போட்டிகளில் ஹம்டன் பார்க்கில் நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணியுடனான பலம்மிக்க ஆட்டத்தில் இங்கிலாந்து ஹரிகேன் கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் போட்டியை 2-2 என சமன் செய்தது.   

2018இல் நெதர்லாந்து மற்றும் இத்தாலிக்கு எதிரான உயர்மட்ட நட்புறவு போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து அவைகளில் முறையே 1-0 என வெற்றியும் 1-1 என சமநிலையும் பெற்றது. இங்கிலாந்து உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் ஆடுவதற்கு முன் தமது அணியின் அமைப்பு மற்றும் சமநிலையை சோதிப்பதற்கு நைஜீரியா மற்றும் கொஸ்டாரிக்காவுடன் நட்புறவு போட்டிகளில் ஆடவுள்ளது.

ஆண்டின் சிறந்த ப்ரீமியர் லீக் வீரர் விருதும் சலாஹ் வசமானது

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் இந்த பருவத்தின் சிறந்த வீரருக்கான விருதை

முகாமையாளர் மற்றும் ஆட்ட பாணி

சாம் அல்லார்டிஸ் இடம் இருந்து ஒரு இடைக்கால பணிக்காக 2016 செப்டெம்பரில் இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற கரேத் சௌத்கேட் 2016 நவம்பர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்மாக அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கிலாந்தின் முன்னாள் பின்கள வீரரான அவர் பிரான்ஸில் 1998 மற்றும் கொரியாஜப்பானில் 2002ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணங்களில் இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்துள்ளார்.

ஐரோப்பிய தகுதிகாண் சுற்றில் F குழுவில் முன்னிலை பெற்று தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இங்கிலாந்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற அவர் அணியை வழி நடாத்தியுள்ளார்.   

ஜோ கோமஸ், ஒக்ஸ்லட்சம்பர்லின் போன்ற வீரர்கள் இல்லாத நிலையிலும் அடம் லல்லான் போதிய போட்டி பயிற்சிகள் இல்லாத நிலையிலும் யார் மத்திய களத்தில் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியுடனேயே இங்கிலாந்து அணி ரஷ்யாவுக்கு பயணிக்க தயாராகி வருகிறது.

4-4-2 என்ற அமைப்பில் ஆடுவது குறித்து சௌத்கேட் ஆர்வம் காட்டியுள்ளார். இதனை முன்களத்தை 10 ஆம் இடத்திற்கு கீழிறக்கி 4-2-3-1 என்றும் அமைக்கலாம். இந்த நிலையில் மைதானத்தின் புஃல்பக் (Fullback) வீரர்கள் தள்ளப்பட்டு முன்கள எல்லைகளில் ஆடும் வீரர்கள் அங்கிருந்து வெளியே வந்து, மத்திய முன்களம் பிளவுபடும்.

பலமும் பலவீனமும்

ஆர்வமுள்ள இளம் வீரர்கள், மத்தியகளத்தின் வேகம் மற்றும் உறுதியான பின்களமே இங்கிலாந்தின் பலமாகும். பெரிய தளத்தில் போதிய போட்டி அனுபவம் இல்லாமை பலவீனமாக உள்ளது. கடந்த ஐரோப்பிய கிண்ணத்தில் அதனை பார்க்க முடிந்தது. அந்த தொடரில் சவாலான போட்டிகளை சமாளிப்பதில் இங்கிலாந்து நெருக்கடியை சந்தித்தது. இங்கிலாந்து வீரர்கள் பலருக்கும் இது முதலாவது உலகக் கிண்ண போட்டியாக அமையவுள்ளது.   

Tamil Sports Roundup in 99 seconds – 04

Uploaded by ThePapare.com on 2018-05-16.

பெல்ஜியம், துனீசியா மற்றும் பனாமா அணிகள் கொண்ட குழுநிலை போட்டிகளை கடந்து வர இங்கிலாந்து எதிர்பார்த்துள்ளது. இதன்போது தாம் எந்த அதிர்ச்சிக்கும் முகம்கொடுக்க மாட்டோம் என்று இங்கிலாந்து உறுதியாக நம்புகிறது.

முக்கிய வீரர்கள்

சினேடின் சிடேனினால் ஒருபூர்த்தியான வீரர்என்று முடிசூடப்பட்ட ஹாரி கேன் உலகின் முன்னணி முன்கள வீரர்களில் ஒருவரென உறுதியாக நிறுவியுள்ளார். டொட்டன்ஹாம் ஹொட்பூர் நட்சத்திரமான ஹாரி கேன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தனது ஆறு போட்டிகளில் ஐந்து தடவைகள் கோலடித்துள்ளார்.

டொட்டன்ஹாமுக்காக மற்றுமொரு சிறப்பான பருவத்தில் ஆடிய ஹாரி கேன் 2017 ப்ரீமியர் லீக்கில் 30க்கும் அதிகமான கோல்களை செலுத்தி முதல்நிலை தாக்குதல் ஆட்டக்காரர் என நிரூபித்துள்ளார். அவருக்கு கோல் பெற ரஹீம் ஸ்டர்லிங் மற்றும் மார்கஸ் ரஷ்போர்ட் உதவியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4-4-2 அமைப்பில் ஜெமி வார்டி அல்லது டானி வெல்பக்கு, கேனுக்கு அடுத்த இடத்தில் இருக்க வாய்ப்பு உண்டு.

பிரித்தானியாவின் சம்பியனான மன்செஸ்ர் சிட்டியின் ஸ்டார்லிங்கிற்கு இந்த பருவம் சிறந்ததாக இருந்தது. அவர் தனது கழகத்திற்காக கோல் பெற்றது மற்றும் கோல் பெற உதவுவதில் சோபித்ததோடு அவரது வேகம் எதிரணி பின்கள வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றபோதும் தனது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டிய தேவை அவருக்கு உள்ளது.

அணித் தலைவருக்கான கைப்பட்டியை அணிய வாய்ப்பு இருக்கும் ஜோர்டன் ஹென்டர்சன் மத்தியகளத்தில் பிரதானமாக செயற்படவுள்ளார். இது கால்பந்து உலகின் மிகத் திறமை மிக்க இளம் வீரரான டெலே அலிக்கு சுதந்திரமாக ஆடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.   

நெய்மார் ரியல் மெட்ரிட் வருவது ‘பயங்கரமானது’ என்கிறார் மெஸ்ஸி

பார்சிலோனா அணியில் விளையாடிய தனது முன்னாள் சக வீரரான நெய்மார்,

எரிக் டயரும் இங்கிலாந்து அணிக்கு பெயரிடப்பட்டுள்ளார். மத்தியகள வீரராக அவருக்கு இந்த பருவம் சிறந்ததாக இருந்தது. முன்களத்தில் கேன் மற்றும் அலிக்கு முன்னால் ஆடுவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.  

கரி கஹில் மற்றும் ஆஷ்லி யங் ஒன்றிணைந்து பின்களத்திற்கு அனுபவம் சேர்க்கின்றனர். இவர்கள் அண்மைக்காலத்தில் மீண்டும் எழுச்சி பெற்று மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பியன் சிட்டி அணியின் கைல் வோகர் மற்றும் ஜோன் ஸ்டோன்ஸ் பின்களத்தில் 4 வீரர்களை பூர்த்தி செய்கின்றனர்.

உத்தேச குழாம்

கோல் காப்பாளர்கள்

ஜக் பட்லான்ட், ஜோர்டன் பிக்போர்ட், நிக் பொப்.

பின்கள வீரர்கள்

ட்ரென்ட் அலெக்சான்டர்ஆர்னோல்ட், கரி கஹில், பாபியன் டெல்ப், பில் ஜோன்ஸ், ஹரி மகுயிரே, டன்னி ரோஸ், ஜோன் ஸ்டோன்ஸ், கிரன் ட்ரிப்பியர், கைல் வோகர், ஆஷ்லி யங்.

மத்தியகள வீரர்கள்

டெலே அலி, எரிக் டயர், ஜோர்டன் ஹென்டர்சன், ஜேஸ் லங்கார்ட், ரூபன் லொப்டஸ்சீக்.  

பின்கள வீரர்கள்

ஹாரி கேன், மார்கஸ் ரஷ்போர்ட், ரஹீம் ஸ்டர்லிங், ஜெமி வார்டி, டனி வெல்பக்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க