இளம் வீரரால் பார்சிலோனா வெற்றி: தொடரும் ரொனால்டோவின் அசத்தல்

63

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, 

பார்சிலோனா எதிர் லெவன்டே

பதின்ம வயது வீரர் அன்சு பட்டியின் இரட்டை கோல் மூலம் லெவன்டே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுக்கு எதிரான புள்ளி இடைவெளியை மூன்றாக குறைத்துக் கொண்டது. 

ப்ரீமியர் லீக் பட்டத்தை நெருங்கும் லிவர்பூல்: அட்லடிகோவை வீழ்த்தியது மெட்ரிட்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களின்..

17 வயதான பட்டி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்றார். 30 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்ற அவர் தொடர்ந்து 31 ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்து இரண்டாவது கோலை புகுத்தினார். இந்த இரு கோல்களும் லியோனல் மெஸ்ஸியின் உதவியோடு பெறப்பட்டவை.

பதில் கோல்களை திருப்ப லெவன்டே அணி இரண்டாவது பாதியில் கடுமையாக போராடிய நிலையில் போட்டியின் மேலதிக நேரம் வரை அந்த அணியின் முயற்சி கைகூடவில்லை. போட்டி முடியும் நேரத்தில் ரூபன் ரொச்சினா லெவன்டே அணிக்காக ஒரு கோலை பெற்றார். 

பட்டி 16 வயதாக இருக்கும்போது கடந்த ஓகஸ்ட் மாதம் ஒசசுனா அணிக்கு எதிராக கோல் ஒன்றை பெற்று பார்சிலோனா சார்பில் லீக் கோலை பெற்ற இளம் வீரராக சாதனை படைத்திருந்தார். 

இந்நிலையில் லுவிஸ் சுவாரஸ் மற்றும் ஒஸ்மானே டெம்பெலே ஆகியோரின் உபாதைக்கு உள்ளாகி இருப்பதால் இளம் வீரருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்புக் கிட்டியுள்ளது. 

ஜுவன்டஸ் எதிர் பியோரென்டினா

கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு பெனால்டி கோல்களை பெற பியோரென்டினா அணிக்கு எதிரான போட்டியில் ஜுவன்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. ரொனால்டோ கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளில் 10 கோல்களை பெற்றுள்ளார்.  

தினேஷின் அபாரத் தடுப்பினால் புளு ஸ்டாரை வீழ்த்தி பொலிஸ் இறுதிப் போட்டியில்

களுத்துறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை..

டியுரினில் இருந்த தனது சொந்த மைதானமான அல்லியன்ஸ் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் பந்து கையில் பட்டதால் வழங்கப்பட்ட பெனால்டி கிக்கை ரொனால்டோ கோலாக மாற்றினார்.  

தொடர்ந்து போட்டியின் முழுநேரம் முடிவதற்கு 10 நிமிடங்கள் இருக்கும்போது பெனால்டி பெட்டிக்குள் ரொட்ரிகோ பென்டன்கூர் இழைத்த தவறால் ஜுவன்டசுக்கு இரண்டாவது பெனால்டி வழங்கப்பட்டது. அதனையும் ரொனால்டோ கோலாக மாற்றினார்.  

போட்டியின் உபாதையீடு நேரத்தில் வைத்து மத்திஜ் லைக்ட் தலையால் முட்டி ஜுவன்டஸ் சார்பில் மூன்றாவது கோலை புகுத்தினார். 

ரொனால்டோ ஜுவன்டஸ் அணிக்காக தொடர்ச்சியாக ஒன்பது சீரி  A போட்டிகளில் கோல்கள் பெற்று, 2005 டிசம்பரில் டேவிட் ட்ரெசேகுட்டுக்கு பின்னர் முதல் முறை இவ்வாறான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

இத்தாலியின் பலம்மிக்க அணியில் அவர் 2018 ஆம் ஆண்டு இணைந்த பின் ரொனால்டோ அந்த அணிக்காக 70 போட்டிகளில் 50 கோல்களை பெற்றுள்ளார்.

ரியல் மெட்ரிட் முதலிடத்திற்கு முன்னேற்றம்: ஜுவன்டஸ் அதிர்ச்சித் தோல்வி

ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1..

இந்த வெற்றியின் மூலம் ஜுவன்டஸ் 22 போட்டிகளில் 54 புள்ளிகளை பெற்று சீரி A தொடரில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு இரண்டாவது இடத்தில் இருந்து இன்டர் மிலானை விடவும் ஆறு புள்ளிகளால் முன்னிலையில் உள்ளது. 

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் எதிர் மன்செஸ்டர் சிட்டி 

பதற்றத்துடன் நடைபெற்ற நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு எதிரான போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஸ்டீவன் பெர்விஜ் கோல் பெற அந்த அணி  2-0 என வெற்றியீட்டியது. 

டச் நாட்டு மத்தியகள வீரரான பெர்விஜ் இந்த வாரம் ஒப்பந்தமான நிலையில் டொட்டன்ஹாம் அணிக்கு அபார திறமையை வெளிப்படுத்தினார். 

சிட்டி அணியின் சன்டிர் சின்சென்கோ 60ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று வெளியேறிய நிலையில் 10 வீரர்களுடன் அடிய அந்த அணி நெருக்கடியை சந்தித்தபோது 3 நிமிடங்களின் பின் பெர்விஜ் டொட்டன்ஹாம் சார்பில் கோல் பெற்றார்.       

இந்நிலையில் 71 ஆவது நிமிடத்தில் சொன் ஹியுங் மின், சிட்டி கோல் காப்பாளரை முறியடித்து பெற்ற கோல் மூலம் டொட்டன்ஹாம் வெற்றியை உறுதி செய்தார். 

Photo Album – Police SC v Blue Star SC | Vantage FA Cup 2019 | Semi Final 2

இந்த வெற்றியின்மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் ப்ரீமியர் லீக்கில் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் நான்கு புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் சிட்டி இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடித்தபோதும் அந்த அணி முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விடவும்  22 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. 

2016 ஒக்டோபருக்குப் பின் ப்ரீமியர் லீக் தொடரில் சிட்டி அணிக்கு எதிராக டொட்டன்ஹாம் வெற்றியை பதிவுசெய்தது இது முதல் முறையாகும். 

ஆர்சனல் எதிர் பர்ன்லி

பர்ன்லி அணி கோல் வாய்ப்புகளை தவறவிட ஆர்சனலுக்கு எதிரான போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது. 

பர்ன்லி அணிக்காக ஜேய் ரொட்ரிகஸ் மற்றும் ஜெப் ஹென்ட்ரிக்சுக்கு பொன்னான கோல் வாய்ப்புகள் தவறிப்போயின. இந்த இருவரும் எதிரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருந்து தலையால் முட்டிய பந்துகள் பட்டும்படாமலும் வெளியேறின.  

இந்த போட்டி சமநிலை பெற்றதன் மூலம் இரு அணிகளும் புள்ளிகளை அதிகரித்துக் கொண்ட நிலையிலும் தலா 31 புள்ளிகளுடன் காணப்படுகின்றன. கோல் வித்தியாசத்தில் ஆர்சனல் 10ஆவது இடத்திலும் பர்ன்லி 11 ஆவது இடத்திலும் உள்ளன. 

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<