இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

592
Sri Lanka vs Zimbabwe

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 10ம் திகதி ஜிம்பாப்வே அணியானது, இலங்கை வந்தடையவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 16ம் திகதி ஆரம்பமாகின்றது.

முதல் போட்டி 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 18ம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 21ம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த போட்டிகள் அனைத்தும் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக நடத்தப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்த ஒருநாள் தொடர், ஐசிசி ஒருநாள் சுப்பர் லீக்கின், இலங்கை அணிக்கான முதல் தொடராக அமையவுள்ளது. அதேநேரம், இந்த போட்டித்தொடர் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த போட்டித்தொடரை நேரடியாக பார்வையிடுவதற்கு, ரசிகர்கள் மைதானத்துக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி – 16 ஜனவரி 2022 – பல்லேகலை
  • 2வது ஒருநாள் போட்டி – 18 ஜனவரி 2022 – பல்லேகலை
  • 3வது ஒருநாள் போட்டி – 21 ஜனவரி 2022 – பல்லேகலை

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க