நியூசிலாந்து அணியை வீழ்த்த சில திட்டங்களை வைத்துள்ளோம் – திமுத்

2081

நியூசிலாந்து அணியும் எமக்கு எதிராக சிறந்த முறையில் விளையாடுவார்கள். அதேபோல, நியூசிலாந்து அணியை வீழ்த்துவதற்கு நாங்களும் ஒருசில திட்டங்களை வைத்துள்ளோம். எனவே அந்த திட்டங்களை கையாண்டு முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவோம் என இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். 

தமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்?

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட…

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (14) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் கீழ் இரு அணிகளும் பங்குபற்றவுள்ள இப்போட்டியில் இரு அணிகளின் ஆயத்தம் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று (13) பிற்பகல் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, நியூசிலாந்து அணியை எவ்வாறு எதிர்கொள்ளத் தயார் என்பது குறித்து கருத்து வெளியிடுகையில்,

”எங்களிடம் ஒருசில திட்டங்கள் உண்டு. முதலில் ஆடுகளத்தைப் பார்க்க வேண்டும். ஏனெனில் மழை காரணமாக ஆடுகளத்தைப் பார்க்க முடியாமல் போனது. பெரும்பாலும் விக்கெட் காப்பாளராக நிரோஷன் திக்வெல்ல விளையாடுவார். தினேஷ் சந்திமாலும், குசல் ஜனித் பெரேராவும் மேலதிக விக்கெட் காப்பாளர்களாக அணியில் உள்ளனர். எனினும், இறுதி பதினொருவர் அணியில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டி ஏற்பாட்டால் அதை செய்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். 

கடந்த காலங்களில் நாங்கள் அடைந்த டெஸ்ட் தொடர் தோல்விகளை எடுத்துக் கொண்டால் நிறைய தற்காப்பு யுக்திகளைத் தான் கையாண்டோம். அதிலும், குறிப்பாக ரங்கன ஹேரத் மற்றும் டில்ருவன் பெரேரா ஆகிய அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார்கள். அதேபோல துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தை எதிர்பார்த்துள்ளோம். 

ஆனால், இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது பெரும்பாலான நேரங்களில் அதிகளவு ஓட்டங்களைக் விட்டுக் கொடுப்பதை தவிர்ப்பது போல அதிக ஓட்டங்களைக் குவிக்க வேண்டும். இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் நாங்கள் நாணய சுழற்சியில் தோற்றாலும், குறைந்தளவு ஓட்ட வித்தியாசத்தில் தான் தோல்வியைத் தழுவியிருந்தோம். அதன்பிறகு தான் நாங்கள் தேவையான அளவு ஓட்டங்களைக் குவிக்கவில்லை என்பது குறித்து யோசித்தோம். 

மறுபுறத்தில் அவர்களுக்கு அதிக ஓட்டங்களைக் குவிப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்தோம். அவ்வாறான தவறுகளைத் தான் நாங்கள் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விட்டோம். 

எனவே, இதுபோன்ற ஆடுகளங்களில் இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை தற்போது நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அதற்கு ஒருசில திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். அதேபோல நியூசிலாந்து அணியும் எமக்கு எதிராக சிறந்த முறையில் விளையாடுவார்கள் என நம்புகிறோம். 

காலநிலை குறித்து அவதானம் செலுத்தும் கேன் வில்லியம்சன்

சவால்மிக்க சூழலில் இலங்கை அணியின் சவாலை எதிர்கொள்ளவிருப்பதாக…

எனினும், அதற்கு பதிலளிக்க நாங்களும் தயாராக உள்ளோம். எனவே அந்த திட்டங்களை கையாண்டு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார். 

டில்ருவன் பெரேராவின் உபாதை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திமுத் பதலளிக்கையில், 

”எம்மிடம் 22 பேர் கொண்ட குழாமொன்று உள்ளது. எனவே அணிக்குள் எந்த நேரத்திலும் 17 வீரர்களை இடம்பெறச் செய்யலாம். தற்போது 15 வீரர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் இன்னும் 2 வீரர்களை அணிக்குள் கொண்டு வரலாம்.

அதேபோல, உபாதைக்குள்ளாகியுள்ள டில்ருவன் பெரேரா குணமடைந்து வருகிறார். எனவே அவர் பூரண குணமடைந்தால் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். 

மறுபுறத்தில் டில்ருவனின் இடத்தை நிரப்புவதற்கு அணியில் இடம்பெற்றுள்ள ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர்களுள் ஒருவருக்கு அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார். 

இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வரிசை குறித்து திமுத் பேசுகையில், டில்ருவன் பெரேராவின் இடத்தை நிரப்புவதற்கு அகில தனஞ்சயவுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. லசித் எம்புல்தெனியவும் இந்தத் தொடரில் நிச்சயம் விளையாடுவார். அதேபோல தனஞ்சய டி சில்வாவும் சுழல் பந்துவீச்சாளராக செயற்படுவார். 

எனவே இந்த 3 வீரர்களுடன் தான் நாங்கள் விளையாடவுள்ளோம். இந்த விக்கெட் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம். கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை காணப்படுவதால் ஆடுகளமும் சற்று ஈரலிப்பாக இருக்கும். இதனால் மிகப் பெரியளவில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகத்தைக் கொடுக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாளைய தினம் நல்லதொரு காலநிலை இருந்தால் கடைசி 3 நாட்களும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். 

இதேநேரம், இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை குறித்து திமுத் கருணாரத்ன கருத்து வெளியிடுகையில், அது எவ்வாறு அமையும் என தற்போது கூறமுடியாது. எனினும், அணிக்குள் அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், இடம்பெற்றுள்ளனர். இதனால் அணியில் ஒருசில மாற்றங்கள் இடம்பெறலாம்.

 ஏனெனில் தென்னாபிரிக்காவை ஒத்த ஆடுகளங்கள் இங்கு கிடையாது. எனவே சுழல் பந்துக்கு சிறப்பாக விளையாடுகின்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம். அதேபோல, எமது பந்துவீச்சு வரிசையிலும் மாற்றங்கள் ஏற்படும். எனவே நாளை காலை ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்து இறுதி பதினொருவர் அணி தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார். 

இலங்கையின் புதிய வீரர்களுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் திட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ள புதிய…

இதேவேளை, 2018 இல் இருந்த அணிக்கும், தற்போதுள்ள அணிக்கும் இடையிலான வித்தியாசம் குறித்து பேசிய திமுத், உண்மையில் எமது வீரர்களுக்கு இன்னும் தன்னம்பிக்கை கொடுப்பதற்கு முயற்சி செய்வோம். 

அதேபோன்று, பயப்படமால் விளையாட வேண்டும் என்ற செய்தியை நான் வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இதுபோன்ற விடயங்களைக் கற்றுக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இறுதியாக இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் வலைப் பயிற்சிகள் ஆகியன தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு திமுத் கருத்து தெரிவிக்கையில், 

”இவர்கள் எமக்கு புதிய பயிற்சியாளர்கள் அல்ல. ருமேஷ் ரத்னாயக்க கடந்த இரண்டு வருடங்களாக எங்களுடன் பணியாற்றி வருகின்றார். சீரற்ற காலநிலையால் எமது பயிற்சிகள் அனைத்தும் தடைப்பட்டுவிட்டது. 

எனினும், நாம் இந்தத் தொடரில் சிறந்த முறையில் போட்டியிட வேண்டும். நாம் அடிப்படைகளை சரியாக செய்ய வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது ஒரு பெரிய விடயம், நாங்கள் அதை சிறந்த முறையில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என தெரிவித்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<