ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் சகிப் அல் ஹசன்

235
Shakib Al Hasan

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன், உபாதை காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில்

அபுதாபி மைதானத்தில் இடம்பெற்று முடிந்திருக்கும்..

சகிப் அல் ஹசனின் இடதுகை சுண்டுவிரலில் ஏற்பட்டிருந்த உபாதை தீவிரமடைந்துள்ள காரணத்தால்,நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் விளையாடவில்லை. எனினும், பங்களாதேஷ் அணி நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று, ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்போது சகிப் அல் ஹசனின் உபாதையை கட்டுப்படுத்தி அவரை அணியில் இணைக்கும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்ட போதும் அது பயணளிக்கவில்லை.

இதன்காரணமாக, இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் சகிப் அல் ஹசன் விளையாடமாட்டார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி நாடு திரும்பவுள்ள சகிப் அல் ஹசனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அவர் சுமார் ஆறு வாரங்கள் அளவில் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் அக்ரம் கான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த திங்கட்கிழமை சகிப் அல் ஹசனின் ஸ்கேன் பரிசோதனை மாதிரிகள் கிடைத்தன. இதில் அவரது உபாதை தீவிரமாகியுள்ளமை தெரிந்தது. அவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட வைப்பதற்கு எமது உடற்கூற்று ஆலோசகர் திஹான் சந்திரமோகன் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், சகிப்பின் உபாதை மேலும் தீவிரமானது. அவரால் துடுப்பாட்ட மட்டையை சரியாக பிடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கான மேலதிக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  சகிப்புக்கு சுமார் 6 வாரங்கள் ஓய்வு தேவைப்படும் என நினைக்கிறேன் என்றார்.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்….

சகிப் அல் ஹசன் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது உபாதைக்குள்ளானார். பின்னர், அவரது உபாதையில் சில குழறுபடிகள் இருந்த போதும், இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ணத் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முழுமையான தொடரிலும் விளையாடினார்.

எனினும், ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும், 20-30 சதவீதமளவில் மாத்திரமே உடற்தகுதி இருப்பதாகவும் சகிப் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கிரிக்கெட் சபை அவரிடம் கலந்துரையாடி, ஆசிய கிண்ணத்துக்கு பிறகு சத்திரசிகிச்சை செய்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தது. இதன்படி விளையாடிய சகிப் தற்போது மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.

உபாதைக்குள்ளாகியுள்ள சகிப் அல் ஹசன் எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<