நியூசிலாந்தை வைட் வொஷ் செய்தது இந்தியா

77
(Photo by MICHAEL BRADLEY / AFP)

நியூசிலாந்து அணி 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்தியாவுக்கு எதிராக ஐந்தாவது டி-20 போட்டியிலும் 7 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்தத் தொடரில் இந்திய அணி 5-0 என வைட் வொஷ் வெற்றியை பெற்றது. 

நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களை துவம்சம் செய்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ் நான்கு ஓவர்களுக்கும் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

மீண்டும் சுப்பர் ஓவரில் இந்தியா அசத்த நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சுப்பர்…

மென்ட் மௌன்கனிவில் (Mount Maunganui) இன்று (02) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 163 ஓட்டங்களை துரத்திய நியூசிலாந்து அணிக்கு தனது 100 ஆவது டி-20 போட்டியில் களமிறங்கிய அனுபவ வீரர் ரொஸ் டெய்லர் கைகொடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி வாய்ப்பை நெருங்கியது.

டி-20 சர்வதேச போட்டிகளில் சொஹைப் மலிக் (113) மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 100 போட்டிகளில் விளையாடும் மூன்றாவது வீரராக ரொஸ் டெய்லர் பதிவானார்.   

ரொஸ் டெய்லர் 47 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசியதோடு நான்காவது விக்கெட்டுக்கு டிம் செய்பேர்டுடன் சேர்ந்து 99 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். டிம் செய்பேர்ட் 30 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை பெற்றார்.   

45 பந்துகள் மீதமிருக்கும்போது நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 116 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த அணி வெற்றி பெற மேலும் 48 ஓட்டங்களையே எடுக்க வேண்டி இருந்தது. குறிப்பாக சிவம் டுபே வீசிய 10 ஆவது ஓவரில் நியூசிலாந்து அணி 34 ஓட்டங்களை விளாசியது. 

எனினும் டிம் செய்பேர்ட் ஆட்டமிழந்த பின் இந்திய அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.   

கடைசி ஓவர் ஆரம்பிக்கும்போது அணி 9 விக்கெட்டுகளுக்கு 143 ஓட்டங்களை பெற்று சரிவை சந்தித்திருந்தது. கடைசி ஓவருக்கு நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் இஷ் சோதி இரண்டு சிக்ஸர்களை விளாசியபோதும் இந்தியாவின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை. 

விராட் கொஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக செயற்பட்டார். நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்ப விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தபோதும் முதல் வரிசையில் துடுப்பாடிய ரோஹித் சர்மா, 41 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார். எனினும் அவர் கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக துடுப்பாட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.   

இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்..

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல். ராகுல் 33 பந்துகளில் 45 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 31 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணிக்கு சவாலான ஓட்டங்களை எடுக்க உதவினர். 

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (05) ஹமில்டனில் ஆரம்பமாகவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 163/3 (20) – ரோஹித் சர்மா 60*, கே.எல். ராகுல் 45, ஷ்ரேயாஸ் ஐயர் 33*, ஸ்கொட் குகலைஜ் 2/25

நியூசிலாந்து – 159/9 (20) – ரொஸ் டெய்லர் 53, டிம் செய்பேர்ட் 50, ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 3/12, நவ்தீக் சைனி 2/23, ஷர்துல் தாகூர் 2/38

முடிவு – இந்தியா 7 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<