இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி

61
India Cricket
Image Courtesy: ICC

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசிமுடிக்க தவறிய இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகின்றது. இதன் முதல் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 4-0 என கைப்பற்றியுள்ளது.

மீண்டும் சுப்பர் ஓவரில் இந்தியா அசத்த நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சுப்பர் ஓவரில்

இதில், நேற்று (31) நடைபெற்ற போட்டியில் 165 ஓட்டங்களை கட்டுப்படுத்திய இந்திய அணி, போட்டியை சுப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றிபெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியின் போது பந்துவீசிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தங்களுடைய ஓவர்களை வீசத் தவறியுள்ளது. இந்திய அணி 2 ஓவர்களை நேரத்திற்குள் வீசத் தவறியதால் அணி வீரர்களுக்கு தலா 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் பின்னர், நடுவர்கள் போட்டி மத்தியஸ்தர் க்ரிஸ் ப்ரோடிடம் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், வீரர்களுக்கான அபாரதம் உறுதிசெய்யப்பட்டது.

ஐசிசியின் புதிய விதிமுறையின் படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஓவர்களை வீசத் தவறும் பட்சத்தில் ஓவருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, இந்திய அணி 2 ஓவர்களை வீசத் தவறியதால் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும், இறுதியுமான T20 போட்டி நாளைய தினம் (02) மௌண்ட் மங்கனுயில் நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க