தொடர் தோல்வியால் தரவரிசையில் ஐந்தாமிடத்திற்கு தள்ளப்பட்ட அவுஸ்திரேலியா

103

இந்திய அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்த ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசையில் ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று (19) பெங்களூரில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் குறித்த தொடர் நிறைவின் பின்னரான ஒருநாள் அணிகள், வீரர்களுக்கான தரப்படுத்தலை ஐ.சி.சி இன்று (20) வெளியிட்டுள்ளது. 

ஸ்மித்தின் சதம் வீணாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா

அவுஸ்திரேலிய அணியுடனான தீர்மானமிக்க மூன்றாவது…….

குறித்த தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 111 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி தொடர் தோல்வியின் பின்னர் ஒரு தரவரிசை புள்ளியை இழந்து 110 தரவரிசை புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேவேளை தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஆரம்பத்தில் காணப்பட்ட அதே 121 தரவரிசை புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாமித்தில் காணப்படுகிறது. 

ஒருநாள் அணிகளுக்கான புதிய தரவரிசை.

  1. இங்கிலாந்து 125 புள்ளிகள்
  2. இந்தியா 121 புள்ளிகள்
  3. நியூஸிலாந்து 112 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா 110 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா 110 புள்ளிகள்
  6. பாகிஸ்தான் – 98 புள்ளிகள்
  7. பங்களாதேஷ் – 86 தரவரிசை புள்ளிகள்
  8. இலங்கை 81 புள்ளிகள்
  9. மேற்கிந்திய தீவுகள் – 80 புள்ளிகள்
  10. ஆப்கானிஸ்தான் – 57 புள்ளிகள்

மேலும் குறித்த ஒருநாள் சர்வதேச தொடரில் பிரகாசித்த வீரர்கள் ஒருநாள் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச தொடரில் இரண்டு அரைச்சதங்களுடன் மொத்தமாக 183 ஓட்டங்களை குவித்து தொடர் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 2 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

இன்னிங்ஸ் அடிப்படையில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசெபெத்தில்…….

அத்துடன் இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் சமடித்து இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த உபதலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரோஹிட் சர்மா 3 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று அசைக்க முடியாத அளவுக்கு தொடர்ந்தும் இரண்டாமித்தில் நீடிக்கின்றார்.

சதத்தின் உதவியுடன் தொடரில் மொத்தமாக 162 ஓட்டங்களை குவித்த அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் ஒரு நிலை முன்னேறி 769 தரவரிசை புள்ளிகளுடன் மீண்டும் முதல் பத்து நிலைகளுக்குள்  நுழைந்துள்ளார். மேலும் இரு இன்னிங்ஸ்களில் இரு அரைச்சதங்களுடன் 170 ஓட்டங்களை குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிகார் தவான் 7 நிலைகள் முன்னேறி 710 தரவரிசை புள்ளிகளுடன் 15ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இரண்டு இன்னிங்ஸ்களில் ஒரு சதம், ஒரு அரைச்சதத்துடன் தொடரில் அதிகூடிய ஓட்டங்களாக 229 ஓட்டங்களை குவித்த முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 4 நிலைகள் முன்னேறி 683 தரவரிசை புள்ளிகளுடன் 23ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் ஆஸி. அணியின் விக்கெட் காப்பாளர் அலக்ஸ் கெரி 2 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (608) 31ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய பங்குவகித்த கே.எல் ராகுல் தொடரில் பெற்றுக்கொண்ட 146 ஓட்டங்களின் உதவியுடன் 21 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளை பெற்று (539) 50ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

சிம்மென்ஸின் அதிரடி ஆட்டத்தால் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்

பிராவோ, பொல்லார்ட்டின் அபார பந்துவீச்சு மற்றும் லெண்டில்……eel

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை.

புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் குறித்த தொடரில் பிரகாசிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான, முதல் பத்து தரவரிசைகளுக்குள் காணப்படும் பெட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ககிஸோ ரபாடா ஐந்தாமிடத்திற்கும், மொஹமட் ஆமிர், மெட் ஹென்றி மற்றும் லுக்கி போர்குசன் ஆகியோர் தலா ஒவ்வொரு நிலைகள் உயர்ந்து முறையே 7,8,9ஆம் நிலைகளுக்கு முன்னேறியுள்ளனர். 

தொடரில் பந்துவீச்சில் மொத்தமாக 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா 2 நிலைகள் முன்னேறி 573 தரவரிசை புள்ளிகளுடன் 27ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் அவுஸ்திரேலிய அணி சார்பாக தொடரில் அதிக விக்கெட்டுக்களை (5) கைப்பற்றிய சுழற்பந்துவீச்சாளர் அடம் ஸம்பா 20 நிலைகள் முன்னேறி 37ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதேவேளை, ச்முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 12 நிலைகள் முன்னேறியதுடன், வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளை (446) பெற்று 65ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.