4ஆவது போட்டியிலும் மண்ணைக் கவ்வியது பாகிஸ்தான்

383
Getty

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானம் செய்தது.

இதன் படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் தலைவர் அசார் அலி 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களையும், இமாத் வசீம் ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும், சமி அஸ்லம் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆதில் ரஷீத் 3 விக்கட்டுகளை வீழ்த்த க்றிஸ் ஜோர்டன் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

பின்னர் 248 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 252 ஓட்டங்களைப் பெற்று 12 பந்துகள் மீதமிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றியை ருசித்தது.

இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 69 ஓட்டங்களையும், ஜோனி பெயர்ஸ்டோ 61 ஓட்டங்களையும் மொயீன் அலி ஆட்டம் இழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் முஹமத் இர்பான் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோனி பெயர்ஸ்டோ தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 247/8 (50)

அசார் அலி 80, இமாத் வசீம் 57*, சமி அஸ்லம் 24  

ஆதில் ரஷீத் 47/3, க்றிஸ் ஜோர்டன் 42/2, மொயீன் அலி 39/2

இங்கிலாந்து – 252/6 (48)

பென் ஸ்டோக்ஸ் 69, ஜோனி பெயர்ஸ்டோ 61, மொயீன் அலி 45*

முஹமத் இர்பான் 26/2, உமர் குல் 39/1

இங்கிலாந்து அணி 4 விக்கட்டுகளால் வெற்றி