இலங்கை அணி அடுத்த ஆண்டு விளையாடவுள்ள தொடர்களின் விபரம் வெளியானது

Sri Lanka Cricket FTP Program 2024

1466

இலங்கை கிரிக்கெட் அணி 2024ம் ஆண்டு விளையாடவுள்ள சர்வதேச போட்டித் தொடர்களுக்கான அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தங்களுடைய முதல் தொடராக ஜனவரி மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகின்றது.

குஜராத் டைடன்ஸ் அணிக்கு புதிய தலைவர்

அதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கை அணி மோதவுள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இலங்கையில் நடைபெறவுள்ளன.

குறித்த இந்த இரண்டு தொடர்களையடுத்து பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்றுவகை போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளதுடன், அதனையடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கிறது.

அதேநேரம் இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் அடுத்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் இலங்கை விளையாடுகிறது.

தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, இறுதியாக நியூசிலாந்து தொடருடன் 2024ம் ஆண்டுக்கான தொடர் நிறைவுக்கு வருகின்றது.

இலங்கை அணியின் தொடர் அட்டவணை – 2024

தொடர் இடம் மாதம் டெஸ்ட் ஒருநாள் T20i
ஜிம்பாப்வே இலங்கை ஜனவரி 3 3
ஆப்கானிஸ்தான் இலங்கை ஜனவரி – பெப்ரவரி 1 3 3
பங்களாதேஷ் வெளியூர் பெப்ரவரி – மார்ச் 2 3 3
T20 உலகக்கிண்ணம் வெளியூர் ஜூன் – ஜூலை
இந்தியா இலங்கை ஜூலை – ஆகஸ்ட் 3 3
இங்கிலாந்து வெளியூர் ஆகஸ்ட் – செப்டம்பர் 3
நியூசிலாந்து இலங்கை செப்டம்பர் 2
மே. தீவுகள் இலங்கை ஒக்டோபர் 3 3
நியூசிலாந்து இலங்கை நவம்பர் 3 3
தென்னாபிரிக்கா வெளியூர் நவம்பர் – டிசம்பர் 2
நியூசிலாந்து வெளியூர் டிசம்பர் – ஜனவரி 3 3

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<