உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு

668

பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் எதிர்பாராத பல முடிவுகளுக்கு மத்தியில் தற்போது நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக, உலகில் அதிகளவான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்து முன்னிலை பெற்றாலும், தற்போது கிரிக்கெட்டுக்கும் அதிகளவான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்மால் அணியை முன்னின்று வழிநடத்தினார் – சந்திக்க ஹதுருசிங்க

பரபரப்பான மூன்றாவது டெஸ்ட்டை வென்று தொடரை..

கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலத்தை கணக்கிடவும், கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகளாவிய சந்தையை விரிவுபடுத்தவும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட் உலகளவில் பிரபலமான விளையாட்டு எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, உலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று முதற்தடவையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்திய ஆய்வில் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புவது தெரியவந்துள்ளது, இதில் 90 சதவீதமானோர் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக 39 சதவீதமானோர் கிரிக்கெட் ரசிகைகள் என்பது சிறப்பம்சமாகும்.

நீல்சன் ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் கடந்த 2017 நவம்பர் முதல் 2018 ஜனவரி வரையிலான காலப்பகுதியில் 16 வயது முதல் 69 வயது வரையிலான பல்வேறு நபர்களிடம் இந்த கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 19,000 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றில் 6,600 பேரிடம் கிரிக்கெட் குறித்த பலதரப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் 14 நாடுகளில் சுமார் ஒரு பில்லியன் பேர் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், 90 சதவீதமானவர்கள் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள். அதில் 16 வயதிற்கு மேற்பட்ட 300 மில்லியன் பங்கேற்பாளர்கள் இருப்பதாகவும், 39 சதவீதமானோர் கிரிக்கெட் ரசிகைகள் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 12 முழு உறுப்பு கிரிக்கெட் நாடுகள், சீனா, மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் கிரிக்கெட்டுக்கு பெரிய ஆதரவு இருக்கும் நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில்,

”உலகளவில் தற்போது தான் முதன்முறையாக கிரிக்கெட் விளையாடடு தொடர்பான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் சுமார் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 61 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.

இதன்மூலம், குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், குடும்பங்கள், பெண்கள் என அதிகளவிலான ரசிகர்களிடம் கிரிக்கெட் விளையாட்டை கொண்டு சேர்ப்பது தொடர்பான புது முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு பிரபலமில்லாத நாடுகளிலும் இதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் வழி குறித்து திட்டமிட்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

தற்போது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி-20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வந்தாலும், 16 வயதுக்கு மேற்பட்ட பலர், இந்த மூன்று வகை போட்டிகளையும் ரசிக்கின்றனர். அதிலும் .சி.சியின் 50 ஓவர்கள் உலகக் கிண்ணம், டி-20 உலகக் கிண்ணம் ஆகிய முக்கிய போட்டித் தொடர்களை 95 சதவீதமான ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடப்பதே கனவு என்கிறார் குசல் மெண்டிஸ்

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிற்கு முன்..

இதேநேரம், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளும் அண்மைக்காலமாக பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவற்றில் 70 சதவீதமானோர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்க விரும்புகின்றனர்.

குறித்த கருத்துக் கணிப்புகளின் படி, மொத்தம் 70 சதவீதமானோர் டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தான் அதிகபட்சமாக 86 சதவீதமானோர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகின்றனர். தென்னாபிரிக்காவில் 91 சதவீதமானோர் ஒரு நாள் போட்டிகளையும், பாகிஸ்தானில் அதிகபட்சமாக 98 சதவீதமானோர் டி-20 போட்டிகளையும் விரும்புகின்றனர்.  

உலகளவில் டி-20 போட்டிகள் அதிகம் விரும்பப்படுகின்றது. இதை உலகம் முழுவதும் 92 சதவீதமானோர் விரும்புகின்றனர். அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளை 88 சதவீதமானோர் நேசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக டி-20 போட்டிகளை ஒலிம்பிக் போட்டியில் இணைத்துக் கொள்ள 87 சதவீதமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.   

கிரிக்கெட் அல்லாத ரசிகர்கள் பலரிடம் ஆய்வு நடத்தியதில் கிரிக்கெட்டை இன்னும் எளிமையாக நடத்துங்கள், கிரிக்கெட் போட்டி அட்டவணைகளை இன்னும் எளிதாக்குங்கள் என்று தெரிவித்திருந்தனர்.

ஆய்வின் முடிவில் கிடைத்த பெறுபேறுகள்

16 முதல் 69 வயதிற்குட்பட்டவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, ஒரு கிரிக்கெட் ரசிகனின் சராசரி வயது 34 கும்.   

கிரிக்கெட் ரசிகர்களில் 39% பெண் ரசிகர்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையை சங்கா, அரவிந்த நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகராக..

ஐசிசியின் உலகக் கிண்ண கிரிக்கெட் மற்றும் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 95% ரசிகர்கள் ஆர்வமாக மற்றும் மிக ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் (68%) மற்றும் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் (65%) ஆகியவற்றில் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் 70% ரசிகர்கள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பொலிவிழந்து வருவதாக கூறப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கு 70% ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இருந்து அதிகப்படியான ரசிகர்கள் (86%) டெஸ்ட் போட்டிகளுக்கு வலுவான ஆதரவு அளித்துள்ளார்கள்.

தென்னாபிரிக்கா நாட்டில் அதிகபட்சமாக 91% ரசிகர்கள் ஒரு நாள் போட்டிகளுக்கும், பாகிஸ்தானில் 98% ரசிகர்கள் 20 ஓவர் போட்டிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   

டி-20 போட்டிகள்தான் அனைவரது ஆதரவையும் பெருமளவில் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 92% ரசிகர்கள் டி-20 போட்டிகளுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளுக்கு 88% ரசிகர்கள் ஆதரவளித்துள்ளனர்.

டி-20 போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என்று 87% ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<