நடுவருடன் முரண்பட்டதால் ஷகீப் அல் ஹசனுக்கு அபராதம்

253

பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் முறையற்ற பந்துவீச்சு என நடுவருடன் முரண்பட்ட காரணத்திற்காக, ஐ.சி.சி ஒழுக்க விதிமுறை மீறலின் அடிப்படையில் குறைந்த பட்ச தண்டணையை வழங்கியுள்ளது.

பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அங்கு மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று வருகின்றது. சுற்றுப்பயணத்தின் இறுதி தொடரான டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.

நேற்று முன்தினம் (17) நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் இலகு வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகீப் அல் ஹசன் நடுவருடன் முரண்பட்ட காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் சபையானது ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தண்டனை விதித்துள்ளது.

திலான் சமரவீரவின் ஓய்வும், குசலின் இரட்டைச் சதமும்

நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட…

குறித்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய பங்களாதேஷ் அணியின் 14 ஆவது ஓவரில் அணியின் தலைவர் ஷகீப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடும் வீசிய பந்து வைட் பந்து (Wide ball) என குறிப்பிட்டிருந்தார். நடுவர் அது முறையான பந்து வீச்சுப்பிரதி என குறிப்பிட்டார். ஆனால் ஷகீப் அல் ஹசன் அது வைட் பந்து எனவும், அதற்கு உதிரி ஓட்டம் வழங்குமாறும் நடுவருடன் முரண்பட்டுள்ளார்.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் தான் நடந்து கொண்ட விதம் தவறு என்பதை ஏற்றுக்கொண்ட ஷகீப் அல் ஹசனுக்கு, ஐ.சி.சி இன் 2.8 ஆம் இலக்க ஒழுக்க விதிமுறை மீறலின் அடிப்படையில் போட்டி ஊதியத்தில் 15 சதவீத அபராத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் தண்டனையாக வழங்கியுள்ளது.

2016 செப்டம்பர் மாதம் இந்த ஒழுக்க விதிமுறை சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பங்களாதேஷ் அணி வீரர் ஷகீப் அல் ஹசனுக்கு இது 2 ஆவது தகுதி இழப்பீட்டு புள்ளி வழங்கப்படும் சந்தர்ப்பமாகும்.

கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற டி20 சுதந்திர கிண்ண தொடரின் இலங்கை அணியுடனான போட்டியின் போதே முதல் தகுதி இழப்பீட்டு புள்ளி இவருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியின் பிரதான நடுவர்களாக ஸைகத் சப்ருடுல்லா மற்றும்  தன்விர் அஹமட் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

ஷகீப் அல் ஹசனுக்கு குறித்த குற்றத்திற்காக குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு வழங்கக்கூடிய அதிக பட்ச தண்டனையாக போட்டி ஊதியத்தில் 50 சதவீத அபராதமும், ஒன்று அல்லது இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (20) டாக்காவில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<