T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக பயிற்சி தொடரில் ஆடும் இலங்கை

212

ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஜூன் மாதம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தீவிரமான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.  

LPL தொடருக்காக 500 இற்கும் அதிகமான வீரர்கள் பதிவு

இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் அணிகளில் ஒன்றான இலங்கை அணியும் தொடருக்கு தயாராகும் விதத்தில் பயிற்சி T20 தொடர் ஒன்றினை தமது வீரர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.  

இந்த பயிற்சி T20 தொடரில் மொத்தம் 03 அணிகள் பங்கேற்பதோடு குறிப்பிட்ட தொடருக்கான அணிகளின் வீரர்கள், T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கையின் பூர்வாங்க குழாத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.  

தொடரில் விளையாடும் மூன்று அணிகளில் ப்ளூ (Team Blue) அணியின் தலைவராக வனிந்து ஹஸரங்க நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, டீம் ரெட் (Team Red) அணியின் தலைவராக சரித் அசலன்க தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் கீரின் (Team Green) அணியின் தலைவர் பொறுப்பு ஜனித் லியனகேவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.  

இதேவேளை பயிற்சி T20 தொடரின் போட்டிகள் அனைத்தும் மே மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

அணிக்குழாம்கள் 

ப்ளூ அணி  

வனிந்து ஹஸரங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், லஹிரு மதுசங்க, ஜெப்ரி வன்டர்செய், துனித் வெல்லாலகே, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, லஹிரு குமார, டினுர கலுப்பகன 

 

ரெட் அணி  

சரித் அசலன்க (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, அஹான் விக்ரமசிங்க, தசுன் ஷானக்க, லஹிரு சமரக்கோன், பினுர பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், அகில தனன்ஞய, சாமத் கோமேஸ், ப்ரமோத் மதுசான், நிமேஷ் விமுக்தி, லசித் குரூஸ்புள்ளே 

 

கீரின் அணி  

ஜனித் லியனகே (தலைவர்), குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, அஷேன் பண்டார, ரமேஷ் மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன, தரிந்து ரத்நாயக்க, லக்ஷான் சந்தகன், இசித விஜேசுந்தர, கருக்க சங்கேத், செவோன் டேனியல், கசுன் ராஜித  

தொடர் அட்டவணை 

  • ப்ளூ எதிர் ரெட் – மே 02 (இரவு 7 மணி) 
  • ரெட் எதிர் கீரின் – மே 04 (இரவு 7 மணி) 
  • ப்ளூ எதிர் கீரின் – மே 05 (இரவு 7 மணி) 
  • ப்ளூ எதிர் ரெட் – மே 08 (காலை 10 மணி) 
  • ரெட் எதிர் கீரின் – மே 10 (காலை 10 மணி) 
  • ப்ளூ எதிர் கீரின் – மே 11 (காலை 10 மணி) 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<