லக்மால் அணியை முன்னின்று வழிநடத்தினார் – சந்திக்க ஹதுருசிங்க

2036

பரபரப்பான மூன்றாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமநிலை செய்வதற்கு மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு பதில் தலைவர் சுரங்க லக்மால் முன்னின்று செயற்பட்டதாக பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 204 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததோடு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓட்டங்களையே எடுத்தது. எனினும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்நிலையில் பார்படோஸ் டெஸ்ட்டின் நான்காவது நாளில் இலங்கை அணி வெற்றிபெற ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த இலக்கை எட்டிய இலங்கை பகலிரவு டெஸ்ட் போட்டியை நான்கு விக்கெட்டுகளால் வென்று தொடரை 1-1 என சமநிலை செய்தது.  

வரலாற்று வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரை சமநிலை செய்த இலங்கை

பல மூத்த வீரர்கள் இல்லாத நிலையிலேயே இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் போட்டித்தடைக்கு உள்ளானது இளம் வீரர்களுக்கு உந்துதலை ஏற்பத்தி இருப்பதாக பயிற்றுவிப்பாளர் குறிப்பிடுகிறார்.   

”நாம் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தோம். அதிலிருந்து மீண்டு வந்து தொடரை சமநிலை செய்தது மிகப்பெரிய சாதனையாகும்” என்று ஹத்துருசிங்க குறிப்பிட்டார். நாம் எப்போதும் நம்பிக்கையோடு இருந்தபோதும் ஆட்டம் முன்னேறிச் சென்ற விதம் அழுத்தத்தை ஏற்படுத்தியது.  

”ஜேசனின் ஆட்டம் தந்திரமாக இருந்தபோதும் எமது பந்துவீச்சாளர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பதிலடி கொடுத்தார்கள். எமது இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சு போட்டியை வென்று தந்தது. சுரங்க வீரர்களுடன் உரையாடி அவர்களை ஒன்று திரட்டினார். நான்கு பந்துவீச்சாளர்களுக்கும் அனைத்து பாராட்டும் சேரவேண்டும். சுரங்க முன்னணியில் இருந்து செயற்பட்டார். குறிப்பாக அந்த 10 ஓவர்களும் மேற்கிந்திய தீவுகளுக்கு அழுத்தத்தை கொடுத்தது” என்றும் அவர் கூறினார்.

லக்மால் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது உட்பட மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்ட் அணித் தலைவராக தனது முதல் அனுபவம் பற்றி குறிப்பிடும்போது, நான் மகிழ்ச்சியை உணர்கிறேன் என்று தெரிவித்தார். நான் இதனை எதிர்பார்க்கவில்லை. தலைமைத்துவத்தை ஏற்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தேன், எனவே, அந்த பொறுப்பை ஏற்றேன் என்றும் லக்மால் கூறினார்.

முந்தைய தினத்தில் மருத்துவமனையில் சிறிது நேரம் கழித்துவிட்டு வந்த குசல் பெரேரா மற்றும் தில்ருவன் பெரேரா இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துவந்தார்கள்.

இந்த இருவரும் ஒரே கழகத்தில் ஒன்றிணைந்து ஆடி அனுபவம் பெற்றவர்கள் என்பதால் கடினமான ஆடுகளத்தில் இந்த சவாலை எதிர்கொள்ள அவர்களால் முடியுமாக இருந்தது. ”நாம் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடினால் இந்த ஓட்டங்களை பெற முடியும் என்று கருதினோம். நாம் இருவரும் ஒரே கழகத்தில் ஆடுவதால் ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்துள்ளோம் இவ்வாறு நான் துடுப்பெடுத்தாடுவது இதுதான் முதல் முறை. எனவே இது எமக்கு மிகக் கடினமாக இருந்தது. இந்த இலக்கை எம்மால் எட்ட முடிந்தது மகிழ்ச்சியானது” என்று தில்ருவன் குறிப்பிட்டார்.  

எனினும் வாய்ப்புகளை தவறவிட்டது குறித்து ஹோல்டர் சுட்டிக்காட்டினார். ”இரண்டாவது இன்னிங்ஸில் நாம் போதுமான ஓட்டங்களை பெறவில்லை. அது எமது பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவர்கள் (இலங்கை) வெற்றி பெற நாம் 140 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தபோதும் அதனை எட்ட முடியும் என்பது எமக்கு தெரியும். எனினும் களத்தடுப்பில் நாம் சில வாய்ப்புகளை தவறவிட்டோம்” என்றார்.  

சமிந்த வாஸின் 23 வருடகால சாதனையை முறியடித்த லஹிரு குமார

அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. அது பற்றி ஹோல்டர் நம்பிக்கையுடன் உள்ளார். ”(ஷனொன்) கப்ரியல் ஆபாரமாக ஆடினார். நான் அவரை பாராட்ட வேண்டும். (ஷேன்) டோரிச்சும் சிறப்பாக ஆடினார். (கெமர்) ரொச் பற்றியும் குறிப்பிட வேண்டும்” என்று ஹோல்டர் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இந்த மூன்று வீரர்களும் முறையே 20 விக்கெட்டுகள், 288 ஓட்டங்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை இந்த தொடரில் எடுத்திருந்தனர்.

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<