கிரிக்கெட் உலகின் மூலோபாயத் தலைவராக மஹேல ஜயவர்தன

1013

கிரிக்கெட் உலகின் மூலோபாய தலைவராக (best tactician) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தனவை அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடவடிக்கை எடுத்துள்ளது.

.சி.சியினால் இணையத்தளம் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணெக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் மார்க் டெய்லர், நியூசிலாந்தின் மார்ட்டின் க்ரோவ், நியூசிலாந்தின் ஸ்டீவன் ஃப்ளெமிங் மற்றும் இலங்கையின் மஹேல ஜயவர்தன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த வாக்கெடுப்பில் 10,000 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பங்கேற்றிருந்ததுடன், 44.9%சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மஹேல ஜயவர்தன, கிரிக்கெட் உலகின் மிகவும் மூலோபாய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வாக்கெடுப்பில் நியூசிலாந்தின் ஸ்டீவன் ஃப்ளெமிங் 39.9% இரண்டாவது இடத்தையும், மார்ட்டின் க்ரோவ் மற்றும் மார்க் டெய்லர் முறையே 8.2% மற்றும் 7% வாக்குகளையும் பெற்றனர்.

Video: விளையாட்டுத்துறையில் அறிமுகமாகும் Mahela & Co வின் அதிரடி திட்டங்கள் | Sports Round-up – Epi 147

இதுஇவ்வவாறிருக்க, இந்தியாவின் எம்.எஸ் தோனி கிரிக்கெட் உலகின் ஆன தலைவர் (Cool Customer) என்று பெயரிடப்பட்டார். நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஊக்கப்படுத்துபவராகவும் (Motivator), பாகிஸ்தானின் இம்ரான் கான் வேகத்தை கட்டுப்படுத்துகின்றவராகவும் (Pacesetter) பெயரிடப்பட்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<