ஐசிசியின் சிறந்த டெஸ்ட், ஒருநாள் அணிகள் அறிவிப்பு

ICC Men's Test and ODI Teams of the Year 2022

58

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியின் தலைவராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஒருநாள் அணியின் தலைவராக பாகிஸ்தானின் பாபர் அஷாம் பெயரிடப்பட்டுள்ளார்

ஐசிசி கடந்த ஆண்டின் சிறந்த T20I அணிகளை நேற்று திங்கட்கிழமை (23) அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் ஆடவருக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் மகளிருக்கான ஒருநாள் அணிகளை அறிவித்திருந்தது.

பங்களாதேஷுடன் முதல் டெஸ்டில் விளையாடவுள்ள அயர்லாந்து!

வெளியிடப்பட்ட இந்தப்பட்டியலில் இலங்கை வீரர்கள் எவரும் உள்வாங்கப்படாத நிலையில், டெஸ்ட் அணியில் அவுஸ்திரேலியாவின் 4 வீரர்களும், இங்கிலாந்தின் 3 வீரர்களும் இடங்களை பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேங், நெதன் லையோன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து அணியின் ஜொனி பெயார்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் எண்டர்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேற்குறித்த வீரர்களை தவிர்த்து மேற்கிந்திய தீவுகளின் கிரைக் பிராத்வைட், பாகிஸ்தானின் பாபர் அஷாம், இந்தியாவின் ரிஷப் பண்ட் மற்றும் தென்னாபிரிக்காவின் காகிஸோ ரபாடா ஆகியோர் டெஸ்ட் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி

உஸ்மான் கவாஜா, கிரைக் பிராத்வைட், மார்னஸ் லெபுசங், பாபர் அஷாம், ஜொனி பெயார்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், பெட் கம்மின்ஸ், காகிஸோ ரபாடா, நெதன் லையோன், ஜேம்ஸ் எண்டர்சன்

அதேநேரம் வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் அணியின் தலைவராக பாகிஸ்தானின் பாபர் அஷாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் சிரேயாஸ் ஐயர், ஜிம்பாப்வேயின் சிக்கண்டர் ரஷா, மேற்கிந்திய தீவுகளின் ஷேய் ஹோப் மற்றும் அல்ஷாரி ஜோசப் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதுமாத்திரமின்றி நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் டிரெண்ட் போல்ட்,  டொம் லேத்தம் ஆகியோருடன் அடம் ஷாம்பா, மொஹமட் சிராஜ், மெஹிதி ஹாஸன் மிராஷ், டிராவிஷ் ஹெட் ஆகியோரும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணி

பாபர் அஷாம் (தலைவர்), டிராவிஷ் ஹெட், ஷேய் ஹோப், சிரேயாஸ் ஐயர், டொம் லேத்தம், சிக்கண்டர் ரஷா, மெஹிதி ஹாஸன் மிராஷ், அல்ஷாரி ஜோசப், மொஹமட் சிராஜ், டிரெண்ட் போல்ட், அடம் ஷாம்பா

இதேவேளை ஆடவர் ஒருநாள் அணியுடன், ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒருநாள் அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் ஒருநாள் அணி

அலீஷா ஹேலி, ஸ்ம்ரிதி மந்தனா, லோரா வொல்வார்ட், நெட் ஸ்கேவியர், பெத் மூனி, ஹர்மன்பிரீட் கவூர் (தலைவர்), அமீலியா கெர், ஷோப்பி எஸ்கலெஸ்டோன், அயபோங்கா ககா, ரேணுகா சிங், ஷப்னிம் இஸ்மைல்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<