இந்தியா – அவுஸ்திரேலியா மூன்றாவது டெஸ்டில் புதிய மாற்றம்!

Australia tour of India 2023

129

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலா மைதானத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மசாலா மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவந்த போதும், மைதானம் புனரமைக்கப்பட்டு வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி அணிக்காக சதமடித்து அசத்திய ரமேஷ், பெதும்

போட்டி தர்மசாலா மைதானத்திலிருந்து மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தூரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தர்மசாலா மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றிருந்தமை மாத்திரமின்றி, புதிய வடிகாலமைப்பொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தர்மசாலா மைதானத்தில் கடந்த 2017ம் ஆண்டு இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று குறித்த தொடரை 2-1 என வெற்றிக்கொண்டிருந்தது.

தற்போது நடைபெற்றுவரும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<